சாம்சங் Galaxy A50 மற்றும் Galaxy M30 எது பெஸ்ட் அம்சத்தை வழங்குகிறது ?
சாம்சங் Galaxy A50 மற்றும் Galaxy M30 யில் எது மிக சிறந்த அம்சத்தை வழங்குகிறது வாருங்கள் பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் சாம்சங் Galaxy A50 மற்றும் Galaxy M30 என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனுடன் நாம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதற்க்கு முன் அதன் டிஸ்பிளே,கேமரா, பேட்டரி மற்றும் ப்ரோசெசர் எப்படி என்பதை பார்க்கிறோம் அந்த வகையில் இன்று சாம்சங் Galaxy A50 மற்றும் Galaxy M30 யில் எது மிக சிறந்த அம்சத்தை வழங்குகிறது வாருங்கள் பார்க்கலாம்.
டிஸ்பிளே
சாம்சங் Galaxy A50 டிஸ்பிளே பற்றி பேசினால் இதில் 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 1080×2340 பிக்சல் ரெஸலுசன் வழங்கப்படுகிறது. அதுவே Galaxy M30யில் 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்
சாம்சங் Galaxy A50 யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் எக்சைனோஸ் 9610 ஆக்டாகோர் சிப்செட் ப்ரோசெசரில் வேலை செய்கிறது Galaxy M30 யின் ப்ரோசெசர் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர் யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் மாலி-G71 GPU வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
சாம்சங் Galaxy A50 யின் கேமரா பற்றி பேசினால்,இதன் பின்னாடி ஒரு ட்ரிப்பில் கேமரா அமைப்பு கொண்டுள்ளது 25-மெகாபிக்ஸல் (f/1.7) + 5-மெகாபிக்ஸல் (f/2.2) + 8-மெகாபிக்ஸல் (f/2.2) அப்ரட்ஜர் கொண்டுள்ளது. மற்றும் இதில் செல்பிக்கு 25-மெகாபிக்ஸல் (f/2.0) அப்ரட்ஜர் கொண்டுள்ளது. அதுவே நாம் Galaxy M30 யின் கேமராவை பற்றி பேசினால் இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9 அப்ரட்ஜர் 5 எம்.பி. செகண்டரி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு இதில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரட்ஜ்ர் உடன் வருகிறது
ரேம்
சாம்சங் Galaxy A50 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் இருக்கிறது மேலும் இதன் ஸ்டோரேஜ் 512 GB வரை அதிகரிக்கலாம் Galaxy M30 பற்றி பேசினால் இதில் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. / 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது
பேட்டரி
சாம்சங் Galaxy A50 4000 Mah . பேட்டரி இதனுடன் இதில் 5 வாட் சார்ஜிங் மூலம் பாஸ்ட் சார்ஜிங் செய்ய முடிகிறது இது ஆண்ட்ராய்டு பை யில் வேலை செய்கிறது மற்றும் Galaxy M30 பற்றி பேசினால் 5000 Mah பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு பை யில் வேலை செய்கிறது
விலை
சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile