Samsung Galaxy A36 கேமரா உட்பட பல அம்சங்கள் லீக்

Updated on 14-Nov-2024
HIGHLIGHTS

Samsung Galaxy S25 சீரிஸ்க்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நிறுவனம் Galaxy A36 மற்றும் A56 மாடல்களை அறிமுகப்படுத்தலாம்.

சமீபத்திய அப்டேட்டில் போனின் கேமரா விவரங்கள் லீக் செய்துள்ளது .

Samsung Galaxy S25 சீரிஸ்க்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தத் சீரிசுக்கு பிறகு, நிறுவனம் அதன் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தலாம். இதில் நிறுவனம் Galaxy A36 மற்றும் A56 மாடல்களை அறிமுகப்படுத்தலாம்.

ஏனென்றால், கடந்த ஆண்டு சாம்சங் Galaxy A35 மற்றும் கேலக்ஸி ஏ 55 ஐ முதன்மையான சாம்சங் கேலக்ஸி எஸ் 24 சீரிசுக்கு பிறகு மிட்ரேஞ்சில் அறிமுகப்படுத்தியது. இப்போது Galaxy A36 தொடர்பான லீக்கள் வரத் தொடங்கியுள்ளன. சமீபத்திய அப்டேட்டில் போனின் கேமரா விவரங்கள் லீக் செய்துள்ளது .

Samsung Galaxy A36 லீக் அம்சம்

Samsung Galaxy A36 ஸ்மார்ட்போன் கேமரா அம்சம் அறிமுகத்திற்கு முன்பே லீக் ஆகியுள்ளது Galaxy Club யின் அறிக்கையின்படி Galaxy A36 50 மெகாபிக்சல் பின்புற பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், நிறுவனம் இந்த நேரத்தில் மாற்றங்களைச் செய்யலாம், ஏனெனில் செல்ஃபி கேமரா 13 மெகாபிக்சல்களுக்கு பதிலாக 12 மெகாபிக்சல்களாக இருக்கலாம். ஆனால் மெகாபிக்சல்கள் குறைவாக இருந்தாலும், நிறுவனம் அதன் சென்சாரை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த போனை பற்றி பேசினால், இதில் Galaxy A36 யில் 50 மெகாபிக்சல் பரும் கேமரா உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். அது ஆச்சரியமல்ல – தற்போதைய Galaxy A35 அதையும் கொண்டுள்ளது.

இந்த போனில் மாற்றங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது Galaxy A36 – A56 போலவே – 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. கடந்த A3x சாதனங்களுக்கு சாம்சங் பயன்படுத்திய பழைய 13 MP சென்சாருடன் ஒப்பிடும்போது இது தெளிவான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களைப் போன்ற அதே சென்சார்களை நிறுவனம் இவற்றிலும் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது போனில் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் இருக்கும்.

Galaxy A36 டிசைன் வித்தியாசத்தில் மாற்றங்களை கொண்டுவரலாம், போனின் கேமரா ஐலேன்ட் அதிகம் வேறுபாடுகள் சொல்லலாம். அதாவது இந்த போனின் லென்ஸ் வெவ்வேறு பேனலில் வெளியே எட்டிபார்க்கது அதாவது இந்த போனை கேமரா ஐலேண்டில் எட்டிபார்க்கலாம், ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 3 அல்லது 7எஸ் ஜெனரல் 2 ஆக இருக்கும் குவால்காம் ப்ரோசெசர் இருக்கலாம் என்று போனின் கீக்பெஞ்ச் லிஸ்ட்டில் கூறுகிறது. சாதனம் இதுவரை பெற்ற சான்றிதழ்களின் அடிப்படையில், 6 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 போன்ற அம்சங்களை போனில் காணலாம்.

இதையும் படிங்க Realme யின் இந்த புதிய போனின் தகவல் லீக் , ஆன பெயர் கூட சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்துள்ளது

source: Galaxy Club

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :