MWC 2019 சாம்சங் நிறுவனம் அதன் Galaxy A30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது

MWC 2019 சாம்சங் நிறுவனம் அதன் Galaxy A30 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் Galaxy A 50 ஸ்மார்ட்போனுடன் Galaxy A30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் Galaxy A 50 ஸ்மார்ட்போனுடன் Galaxy A30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.

போட்டோக்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo