Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் 5 அம்சம் பாருங்க

Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் அறிமுகம் இதன் டாப் 5 அம்சம் பாருங்க
HIGHLIGHTS

Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

இந்த போனின் ஆரம்ப விலை ரூ.26,999. ஆகும்

Samsung Galaxy A25 யில் இருக்கும் டாப் அம்சம் பார்க்கலாம்

Samsung Galaxy A25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது, இந்த போனின் ஆரம்ப விலை ரூ.26,999. ஆகும், மேலும் இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் உள்ளது. மேலும், பெரிய டிஸ்ப்ளேவுடன் 5000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாம்சங் Galaxy A25 யில் இருக்கும் டாப் அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Samsung Galaxy A25 விலை மற்றும் விற்பனை

சாம்சங் Galaxy A25 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமாக இரண்டு வகைகளில் வரும். விலையைப் பற்றி பேசினால், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.26,999 ஆக இருக்கும். அதேசமயம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,999. ஆகும் இந்த போன் ப்ளூ எல்லோ மற்றும் ப்ளூ ப்ளாக் ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் வரும். இந்த போனை சாம்சங் இ-ஸ்டோருடன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்கலாம். போனை வாங்கினால் ரூ.3,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy A25 சிறப்பம்சம்

Samsung Galaxy A25 டிஸ்ப்ளே

சாம்சங் Galaxy A25 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டை கொண்டுள்ளது. போனுக்கு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரை போன் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

ப்ரோசெசர் மற்றும் ரேம்/ ஸ்டோரேஜ்

இந்த போன் 8GB RAM உடன் octa-core Exynos 1280 சிப்செட் சப்போர்டுடன் வருகிறது. இது சாம்சங்கின் இன்ஹவுஸ் சிப்செட் ஆகும், இது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. சாம்சங் Galaxy A25 இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது- 128GB மற்றும் 256GB. மைக்ரோ SD கார்டு மூலம் போனின் ஸ் டோரேஜை அதிகரிக்கலாம். மேலும் இந்த போனில் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான One UI 6.0 யில் வேலை செய்கிறது.

கேமரா

சாம்சங் Galaxy A25 50MP ப்ரைம் கேமரா சென்சார் கொண்டது. மேலும் 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 2எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 13எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி

போனின் பேட்டரி பேசுகையில் இந்த போனில் 5000 mAh பேட்டரி ஆதரவுடன் வருகிறது. இந்த போனில் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இருப்பினும், சாம்சங் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை வழங்குகும் , ஏனெனில் இன்று 67 முதல் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இந்த போன் ரூ.25 முதல் 30 ஆயிரம் விலையில் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Jio 148 ரூபாயில் கிடைக்கும் 12 OTT Subscription அதும் முழுசா 1 மாதங்களுக்கு

செக்யூரிட்டி

செக்யுரிட்டிக்காக இந்த போனில் இதில் நாக்ஸ் செக்யூரிட்டி சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆட்டோ பிளாக்கர், ப்ரைவசி டாஷ்போர்டு, சாம்சங் பாஸ்கி மற்றும் பிற அம்சங்களை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo