இந்தியாவில் அறிமுகம் ஆகுமுன்னே Samsung Galaxy A25 5G,யின் பல தகவல் லீக்

Updated on 15-Nov-2023

Samsung Galaxy A25 5G விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஃபோனின் ஆதரவுப் பக்கம் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் உள்ள மொபைலின் மாடல் எண் SM-A256E/DSN ஆகும். FCC இல் சமீபத்தில் பார்த்த யூனிட்டில் இருந்து இது சற்று வித்தியாசமானது. வெவ்வேறு சந்தைகளுக்கு வெவ்வேறு வேரியன்ட்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

இந்த போனின் விவரங்கள் நீண்ட நாட்களாக லீக் வந்த நிலையில், தற்போது இந்த போன் தொடர்பான பயனர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரலாம். Samsung Galaxy A25 யின் இதில் எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy A25 5G (leaked) specs

இந்த போனின் டிசைன் பற்றி பேசுகையில், அதன் பின்புறத்தில் 3 வர்டிக்கள் கேமரா ரிங்க்ஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே முன்பக்கத்தில் வழங்கப்படும். லைட் ப்ளூ, ப்ளூ கிரே,லைம் க்ரீன் மற்றும் ப்ளாக் நிறங்களில் போனை அறிமுகப்படுத்தலாம். இதிலிருந்து இந்த ஃபோன் கேலக்ஸி ஏ சீரிஸின் மற்ற போன்களைப் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இந்த போனில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே இருக்கும். இந்த போனில் Exynos 1280 5G சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். இதனுடன், குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் இதில் கொடுக்கப்படலாம். இதனுடன், 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் மூன்று பின்புற கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போனில் 50MP ப்ரைமரி கேமரா சென்சார் இருக்கும். அதே நேரத்தில், 13 மெகாபிக்சல் முன் சென்சார் வழங்கப்படலாம்.

இதையும் படிங்க::iQoo 12 5G இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது

இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OneUI 6 OS யில் வேலை செய்ய முடியும். போனில் 25W சார்ஜிங் பவர் கொண்ட 5000mAh பேட்டரி வழங்கப்படலாம். இந்த போனில் USB-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :