Samsung Galaxy A20E சிறப்பம்சம் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது
திய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனுடன் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்தவகையில் கேலக்ஸி A20E ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. மற்றும் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்த கேலக்ஸி A20E மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
தோற்றங்களை வைத்து பார்க்கும் போது புதிய கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் பார்க்க கேல்கஸி எஸ்10இ மாடலின் விலை குறைந்த பதிப்பாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0, வைபை, ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனுடன் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, HD தரத்தில் வழங்கப்பட்டது. இத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இவைதவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகப்படியான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம். அந்த வகையில் கேலக்ஸி எஸ்10, எஸ்10இ, கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன்களிடையே அதிகளவு வேறுபாடுகள் இருக்காது என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile