Samsung Galaxy A15 5G யின் புதிய 6GB+128GB வேரியன்ட் அறிமுகம்

Updated on 14-Feb-2024
HIGHLIGHTS

Samsung அதன் Samsung Galaxy A15 5G வரிசையில் ஒரு புதிய வேரியன்ட் அறிமுகம் செய்துள்ளது.

புதிய வேரியன்ட் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது.

இந்தியாவில் Galaxy A15 5G ஐ 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வகைகளில் அறிமுகப்படுத்தியது.

Samsung அதன் Samsung Galaxy A15 5G வரிசையில் ஒரு புதிய வேரியன்ட் அறிமுகம் செய்துள்ளது. இது ஆஃப்லைன் மார்க்கெட்டில் வந்துள்ளது. புதிய வேரியன்ட் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது. முன்னதாக, நிறுவனம் இந்தியாவில் Galaxy A15 5G ஐ 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வகைகளில் அறிமுகப்படுத்தியது.

Samsung Galaxy A15 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Samsung Galaxy A15 5G யின் விலையை பற்றி பேசினால் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 13, 2024 முதல் ஆஃப்லைனில் விற்பனைக்கு கிடைக்கும்.

Galaxy A15 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy A15 5G யில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் FHD+ ரெப்ராஸ் ரேட் 90Hz மற்றும் பீக் ப்ரைட்னாஸ் 800 நிட்ஸ் இருக்கிறது. Galaxy A15 5G ஸ்மார்ட்போனில் மீடியாடேக் டிமன்சிட்டி 6100 ப்ளஸ் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான One UI 6.0 இல் இயங்குகிறது. Galaxy A15 5G 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Galaxy A15 5G யின் பின் கேமரா 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கனேக்க்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :