Samsung Galaxy A05s அறிமுகம் டாப் அம்சங்களை பாருங்க

Updated on 19-Oct-2023
HIGHLIGHTS

Samsung Galaxy A05s ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது.

Samsung Galaxy A05s போனின் விலை ரூ.14,999.ஆகும்.

சாம்சங் நிறுவனம் புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனான Samsung Galaxy A05s ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பட்ஜெட் பிரிவு போன் ஆகும், இது கடந்த மாதம் மலேசியாவில் Galaxy A05 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. தெரியாதவர்களுக்காக, சாம்சங் A-சீரிஸின் இந்த சமீபத்திய போனில் Qualcomm ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Samsung Galaxy A05s விலை தகவல்

இந்த போனின் விலை பற்றி பேசுகையில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் சிங்கிள் ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது. இந்த போனின் விலை ரூ.14,999.ஆகும். இதை Light Violet, Light Green மற்றும் Black நிறங்களில் வாங்கலாம். இதில் அறிமுக சலுகையாக SBI பேங்க் கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களுக்கு 1000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது.

#image_title

Samsung Galaxy A05s டாப் 5 சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

சாம்சங் Galaxy A05s ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் PLS LCD டிஸ்ப்ளே உள்ளது. தொலைபேசி 1080×2400 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டுள்ளது இந்த போனில் 90Hz ரெப்ரஸ் ரேட் ஆதரவுடன் வருகிறது.

ப்ரோசெசர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Galaxy A05s ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 680 4G சப்போர்ட் உள்ளது, இது 6nm அடிப்படையிலானது. இந்த போன் Adreno 610 GPU சப்போர்டுடன் வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் கூடிய போனில் One UI கஸ்டமைஸ் ஸ்கின் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த போனில் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் மூன்று பின்புற கேமரா செட்டிங்க்டன் வருகிறது. இது 50MP ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக இந்த போனில் 16MP செல்பி கேமரா உள்ளது.

Galaxy A05s Camera

பேட்டரி

போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரி சப்போர்டுடன் வருகிறது. மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இது 4ஜி இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது Wi-Fi, டூயல் பேண்ட் ஆதரவு மற்றும் புளூடூத் 5.1 இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் தடிமன் 8.8 மிமீ. எடை 194 கிராம். ஃபோன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க : அக்டோபர் 24 முதல் இந்த போன்களில் WhatsApp வேலை செய்யாது

Galaxy A05s Battery

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :