சர்வதேச பீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது

Updated on 26-May-2018
HIGHLIGHTS

சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :