Reliance JioPhone அடுத்த விற்பனை செப்டம்பர் 12 அன்று நடைபெறும்…!

Updated on 07-Sep-2018
HIGHLIGHTS

Reliance JioPhone 2பீச்சர் போன் அடுத்த விற்பனை jio.com 12 செப்டம்பர் அன்று பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதுவரை மூன்று ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்று இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் (Jio.com) நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.

ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
– 2000 mah பேட்டரி

இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் டெய்ரி மில்க் சாக்லேட் கவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இலவசமாக 1 ஜிபி டேட்டா பெற முடியும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :