சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. அதில் பாப்-அப் ரக முன்புற கேமரா மற்றும் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
முன்னதாக ரெட்மி தலைவர் லு வெய்பிங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிவேக செயல்திறன், நீண்ட பேட்டரி பேக்கப், சிறப்பான கேமரா உள்ளிட்டவை இருக்கும் என தெரிகிறது.
முன்னதாக சியோமி இந்தியா துணை தலைவர் ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியான விவரங்களில் சியோமி நிறுவனம் பாப்-அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்பட்டிருந்தது.
இத்துடன் 6.39 இன்ச் FHD பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது.
ரெட்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.