Redmi Note 14 சீரிஸ் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
Xiaomi இந்தியாவில் அதன் Redmi Note 14 Series இன்று அறிமுகம் செய்துள்ளது,
இந்த சீரிஸ், நிறுவனம் Redmi Note 14, Note 14 Pro மற்றும் Note 14 Pro+ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Xiaomi இந்தியாவில் அதன் Redmi Note 14 Series இன்று அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய போன்களை சீனா சந்தையில் அறிமுகம் செய்த பின் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ், நிறுவனம் Redmi Note 14, Note 14 Pro மற்றும் Note 14 Pro+ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய வேரியன்ட் சீன வேரியன்ட் போன்ற அதே அம்சங்களுடன் வருகிறது.
Redmi Note 14 series சிறப்பம்சம்
Redmi Note 14 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் 2,100 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7025 Ultra சிப்செட் ப்ரோசெசர் மேலும் இந்த போனில் கேமரா பற்றி பேசினால் இதில் டுயல் கேமரா செட்டப் உடன் இதன் மெயின் கேமரா 50-மேகபிக்சல் மற்றும் இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் லென்ஸ் வழங்கப்படுகிறது மேலும் செல்பிக்கு 16-மேகபிக்சல் கேமரா லென்ஸ் முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது, இதை தவிர 5,110mAh பேட்டரி உடன் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Redmi Note 14 Pro சிறப்பம்சம்
Redmi Note 14 Pro அடிப்படை மாடலை விட அதிக அப்டேட்களுடன் வருகிறது. இந்த ஃபோன் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.67-இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இந்த போனில் கொரில்லா விக்டஸ் 2 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 7300 Ultra அல்ட்ரா சிப்செட் போனில் பவர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதன் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல் ஆகும். இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் 45W சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரி உள்ளது.
Redmi Note 14 Pro+ சிறப்பம்சம்
Redmi Note 14 Pro+ இந்தத் சீரிஸ் ப்ளாக்ஷிப் வெர்சனாகும் . இது 6.67 இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதில் நிறுவனம் Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் வழங்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் சென்சார்கள் முந்தைய வகைகளிலிருந்து வேறுபட்டவை.
இந்த போனின் கேமரா பற்றி பேசினால்,இதில் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல் ஆகும். இது 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 20 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது.
விலை தகவல்
Redmi Note 14 யின் 6GB 128GB ஸ்டோரேஜ் ஆரம்ப விலை 17,999ரூபாயாகும், மேலும் இதன் மற்றொரு ஸ்டோரேஜ் விலை 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை 18,999ரூபாய்க் இருக்கிறது, அதுவே இதன் டாப் வேரியன்ட் 8GBரேம் அம்ற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 20,999ரூபாயாக இருக்கிறது இந்த போனின் முதல் விற்பனை அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Amazon யில் வாங்கலாம்.
Redmi Note 14 Pro: ஆரம்ப விலை 23,999ரூபாய்க் இருக்கிறது. இந்த விலை அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரிக்கானது. அதன் இரண்டாவது மாறுபாடு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.25,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும். இந்த ஃபோனை நிறுவனத்தின் இணையதளம், பிளிப்கார்ட் அல்லது நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.
Redmi Note 14 Pro+ விலையைப் பற்றி பேசுகையில் , அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வேரியண்டின் விலை ரூ.29,999. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.31,999. அதன் டாப் வேரியண்டின் (12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ) விலை ரூ.34,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் முதல் விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும். இந்த ஃபோனை நிறுவனத்தின் வெப்சைட், பிளிப்கார்ட் அல்லது நிறுவனத்தின் ரீடைளர் விற்பனைக் கடைகளில் வாங்கலாம். ICICI மற்றும் HDFC பேங்க் கஸ்டமர்களுக்கு இந்த போன்களை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:Upcoming Smartphones: இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் சூப்பர் போன்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile