Redmi Note 13R Pro அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Redmi Note 13R Pro அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

சியோமியின் புதிய Redmi Note 13R Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Redmi Note 13, Note 13 Pro மற்றும் Note 13 Pro+ ஆகியவை அடங்கும்

, இந்த ரெட்மி ஃபோனின் விலை 1,999 யுவான் (தோராயமாக ரூ. 23,750) ஆக வைக்கப்பட்டுள்ளது

சியோமியின் புதிய Redmi Note 13R Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் ஏற்கனவே அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 13, Note 13 Pro மற்றும் Note 13 Pro+ ஆகியவை அடங்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையைப் பார்ப்போம்.

Redmi Note 13R Pro விலை தகவல்

இறுதியாக, விலையைப் பற்றி பேசினால், இந்த ரெட்மி ஃபோனின் விலை 1,999 யுவான் (தோராயமாக ரூ. 23,750) ஆக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மிட்நைட் பிளாக், டைம் ப்ளூ மற்றும் மார்னிங் லைட் கோல்ட் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

Redmi Note 13R Pro டிஸ்ப்ளே

ரெட்மியின் புதிய Note 13R Pro 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீத பேனல், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2400 x 1080 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 5,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவை வழங்குகிறது.

Note 13R Pro பர்போமான்ஸ்

இந்த போனில் 12ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த போனில் MediaTek Dimensity 6080 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 யில் இயங்குகிறது..

இதையும் படிங்க BSNL அறிமுகம் செய்தது WhatsApp சாட்போட் அனைத்து வேலைகளும் ஒரு நொடியில் முடியும்

Note 13R Pro கேமரா

போட்டோ எடுப்பதற்கு, இந்த ஃபோனில் 108MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 3x யின் -சென்சார் ஜூம் கொண்ட 2MP டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இது பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் கூடிய 16MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

Note 13R Pro பேட்டரி

இதில் 5000mAh பேட்டரி உள்ளது., இந்த ஸ்மார்ட்போனில் 33W சார்ஜிங் ஸ்பீடை சப்போர்ட் செய்யும்

Note 13R Pro கனெக்டிவிட்டி

இது தவிர, Note 13R Pro ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஒரு IR பிளாஸ்டர், USB-C போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், 5G ஆதரவு, Wi-Fi 5 மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo