Xiaomi கடந்த வாரம் இந்திய சந்தையில் Redmi Note 13 5G சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் மூன்று கைபேசிகள் உள்ளன – நோட் 13 5ஜி, நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 13 ப்ரோ+ 5ஜி. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். எனவே அவற்றின் இந்திய விலை, வெளியீட்டு சலுகைகள், மற்றும் அம்சங்களைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Note 13 5G series இந்தியாவில் இதன் விலை 17,999ரூபாயில் ஆரம்பமாகிறது. மற்றும் 35,999 ரூபாய் வரை இருக்கிறது, Note 13 5G இன்று மதியம் 12 மணி முதல் Amazon, Mi Sore மற்றும் பிற ரீடைலர் சேனல்களில் வாங்குவதற்கு கிடைக்கும். அதேசமயம் ப்ரோ மற்றும் ப்ரோ+ மாடல்கள் பிளிப்கார்ட், Mi ஸ்டோர் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும்.
Redmi Note 13 Pro 5G மற்றும் Note 13 Pro+ 5G ஆகிய 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 1220×2712 பிக்சல்கள் ரேசளுசன்இருக்கிறது.
இதையும் படிங்க: Jio வெறும் 100 ரூபாயில் கிடைக்கும் கிட்டத்தட்ட 1 மாத வேலிடிட்டி
Redmi Note 13 Pro 5G ஆனது Snapdragon 7s Gen 2 ப்ரோசசறை கொண்டுள்ளது. அதுவே நோட்13 Pro+ யில் Dimensity 7200-Ultra SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது,
கேமராவை பற்றி பேசுகையில் இதில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.