Redmi Note 12R Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

Updated on 01-May-2023
HIGHLIGHTS

ரெட்மி அதன் புதிய Redmi Note 12R Pro 5G போனை அறிமுகம் செய்துள்ளது

Redmi Note 12R Pro 5G ஒரு வேரியண்ட் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Redmi Note 12R Pro 5G ஒரு வேரியண்ட் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி அதன் புதிய Redmi Note 12R Pro 5G போனை அறிமுகம் செய்துள்ளது  Redmi Note 12R Pro 5G போன் தற்பொழுது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த போனுடன் ஒரு புதிய Redmi Note 12 சீரிஸ் என்ட்ரி கொடுத்துள்ளது இந்த சீரிஸின் கீழ் இதற்கு முன் Redmi Note 12 5G, Redmi Note 12 4G, Redmi Note 12 Pro 5G, Redmi Note 12 Pr+ 5G மற்றும் Redmi Note 12 Turbo போன்ற சாதனங்கள் இருந்தன. Redmi Note 12R Pro 5G உடன் Snapdragon 4 Gen 1 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Redmi Note 12R Pro 5G யின் விலை தகவல்.

Redmi Note 12R Pro 5G ஒரு வேரியண்ட் 12GB ரேம் மற்றும் 256GB  ஸ்டோரேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 1,999 சீன யுவான் அதாவது சுமார் 23,700 ரூபாய். Redmi Note 12R Pro 5G ஐ கருப்பு, தங்கம் மற்றும் வெள்ளை நிறங்களில் வாங்கலாம். இந்த போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது குறித்து தற்போது எந்த செய்தியும் இல்லை.

Redmi Note 12R Pro 5G சிறப்பம்சம்.

Redmi Note 12R Pro 5Gடிஸ்பிளே

Redmi Note 12R Pro 5G யில்  6.67 இன்ச் முழு HD OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுஉள்ளது. ரெப்ரஸ் ரேட் 120Hz இருக்கிறது  டிஸ்பிளேவின் பிரைட்னஸ் 1200 நிட்கள் வழங்குகிறது . 

Redmi Note 12R Pro 5G ரேம் மற்றும் ப்ரோசெசர்

Redmi Note 12R Pro 5G ஆனது 12 GB LPDDR4X ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 4 Gen 1 செயலியுடன் 256 GB UFS 2.2 ஸ்டோரேஜை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 ஐப் வழங்குகிறது.

Redmi Note 12R Pro 5G கேமரா

Redmi Note 12R Pro 5G ஆனது இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 48 மெகாபிக்சல்கள் ஆகும். இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் கொண்டது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 12R Pro 5G யின் பேட்டரி 
.
இந்த ரெட்மி ஃபோனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, மேலும் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ஃபோனில் ஒரு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. ஃபோனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, டூயல் சிம், ப்ளூடூத் v5.1, GPS, 3.5mm ஆடியோ, USB Type-C போர்ட், வாட்டர் ரெஸிஸ்டண்ட் IP53 ரேட்டிங்கை கொண்டுள்ளது. போனின் மொத்த எடை 188 கிராம்ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :