108MP கேமராவுடன் Redmi Note 12 Pro Speed Edition ஸ்மார்ட்போன் டாப் அம்சம் .

Updated on 29-Dec-2022
HIGHLIGHTS

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

Redmi Note 12 Pro Speed ​​Edition ஆனது 6.67-inch Full HD Plus punch hole AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

சீனாவில் நடைபெற்ற ரெட்மி K60 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பீடு எடிஷன் மாடலில் 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 210 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 710 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீன சந்தையில் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Redmi Note 12 Pro Speed Edition சிறப்பம்சம்

Redmi Note 12 Pro Speed ​​Edition ஆனது 6.67-inch Full HD Plus punch hole AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120 Hz புதுப்பிப்பு வீதத்தையும் 900 nits இன் உச்ச பிரகாசத்தையும் கொண்டுள்ளது. HDR10+ டிஸ்பிளேயுடன் துணைபுரிகிறது. ஃபோனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி செயலி மற்றும் 12 ஜிபி வரை ரேம் உடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. போனில் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 14 இயங்குதளம் போனில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 5000 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனில் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :