Redmi 12 சீரிஸ் இந்தியாவில் விரைவில் வெளியாகும்

Updated on 01-Nov-2022
HIGHLIGHTS

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 12 சீரிசில்- ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தை வல்லுனரான கேக்பர் ஸிபெக் (Kacper Skrzypek) ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சியோமி நிறுவனத்தின் ஹைப்பர்சார்ஜ் சீரிஸ் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் மாடலின் அம்சங்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் மாடலில் 6.67 இன்ச் FHD OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+ வசதி, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், மாலி-G68 GPU வழங்கப்படும் என தெரிகிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார்களும், 16MP செல்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் சியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இதில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், சியோமி 11i 5ஜி மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :