Xiaomi யின் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனான Redmi Note 12 Pro (4G)அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் Note 12 வரிசையில் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் இந்த Redmi Note 12 Pro போனை 4G மூலம் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த போன் 2021 யில் அறிமுகமான edmi Note 10 Pro Max ரீபிராண்ட் வெர்சனாகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 732Gப்ரோசெசர் கொண்டுள்ளது Redmi Note 12 Pro 4G டாப் 5 அம்சங்களை பற்றி முழு தகவல் பற்றி பார்க்கலாம்.
Redmi Note 12 Pro வில் Redmi Note 12 Pro கான்பிகரேஷன் விலை € 349.90 (சுமார் Rs 31,320) வைக்கப்பட்டுள்ளது. Redmi Note 12 Pro ஆனது நீலம், சாம்பல், போலார் ஒயிட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது. ஜெர்மனி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்தியாவில் இந்த போன் கிடைக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதிய Note 12 Pro வில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது, இது முழு HD+ ரெஸலுயூசன் 120Hz ரெப்பிரஸ் ரேட் 395ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் நீட்ஸ் பிரைட்னஸ் வழங்குகிறது, இது டால்பி விஷன் கன்டென்ட் சப்போர்ட் மற்றும் செல்பிக்கு பன்ச் ஹோல் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் ஒரு ஒக்ட்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 732G ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் ஆன்டெனா 618 GPU, 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையின் கீழ் MIUI 13 யில் வேலை செய்கிறது.
Note 12 சீரிஸின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனில் குவாட்-ரியர் கேமரா செட்டிங் உள்ளது, இதில் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட 108MP பிரைமரி ஷூட்டர் ஆகியவை அடங்கும். முன் பேனலில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
Note 12 Pro 4G யில் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 67-W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும்.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் டைப் C சார்ஜிங் போர்ட், ஸ்டிரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் IP53 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இது தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க உதவும், இதை தவிர இந்த போனில் டெடிகேட்டட் மைக்ரோ SD கார்ட் ஸ்லோட் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பிங்காரப்ரின்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.