Redmi யின் இந்த இரு ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடி குறைப்பு

Updated on 04-Mar-2024
HIGHLIGHTS

Xiaomi யின் சப் பிராண்டன Redmi அதன் இரு பாப்புலர் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது

நிறுவனம் Redmi Note 12 4G மற்றும் Redmi 12 4G விலையை குறைத்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எவ்வளவு குறைந்த விலையில் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Xiaomi யின் சப் பிராண்டன Redmi அதன் இரு பாப்புலர் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது, Redmi யின் எந்த நீங்க வாங்க விரும்பினால் நீங்கள் இதை எளிதாக வாங்கலாம், நிறுவனம் Redmi Note 12 4G மற்றும் Redmi 12 4G விலையை குறைத்துள்ளது. இப்போது 5G தொழில்நுட்பம் இந்தியாவில் வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் 5G நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் அடைந்துவிட்டதால், பயனர்கள் 5G தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாகவே தற்போது 4ஜி ஸ்மார்ட்போன் சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்று கூறலாம். ரெட்மியின் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எவ்வளவு குறைந்த விலையில் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Redmi யின் புதிய விலை தகவல்

Redmi Note 12 4G மற்றும் Redmi 12 4G யின் இரண்டு மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது, இரண்டு ஸ்மார்ட்போன்களின் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விலைகளும் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. ரெட்மி நோட் 12 4ஜியின் விலை தற்போது ரூ.13,999ல் இருந்து ரூ.12,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரெட்மி 12 4ஜியின் விலை ரூ.10,999ல் இருந்து ரூ.10,499 ஆக குறைந்துள்ளது.

Redmi Note 12 4G specifications

Redmi Note 12 4G யின் 6.67 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதை தவிர இதன் ரேசளுசன் 2400 x 1080 பிக்சல் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது,, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 685 சிப்செட்டுடன் வருகிறது, மேலும் இந்த போன் Android 13 அடிபடையின் கீழ் MIUI 14 யில் வேலை செய்கிறது

இதன் கேமராவை பற்றி பேசுகையில் இதில் 50MP மெயின் கேமரா, 8MP செகண்டரி கேமரா மற்றும் இதில் மூன்றாவதாக 2MP கேமரா வழங்கப்படுகிறது, இந்த போனின் முன்பக்கத்தில் 13MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது edmi Note 12 4G யில் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் 5,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது

இதையும் படிங்க: Jio செம்ம பிளான் 6GB போனஸ் டேட்டா உடன் கிடைக்கும் 12+ OTT அன்லிமிடெட் வாய்ஸ் கால்

Redmi 12 4G specifications

Redmi 12 4G சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.79 இன்ச் முழு HD ப்ளஸ் டிஸ்ப்ளே வழங்கபடுகிறது, இதில் 90Hz யின் ரெப்ராஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது இது 240Hz யின் டச் செம்பளிங் விகிதத்தையும், 450 nits இன் ஹை பரைத்னாஸ் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 பலத்பறம் Redmi 12 4G ஆனது MediaTek Helio G88 செயலியைக் கொண்டுள்ளது. பேட்டரி பவர் 5000mAh மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங். இணைப்பிற்கு, ஃபோன் WiFi, GPS, Bluetooth, v5.0, NFC மற்றும் USB Type-C ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :