Redmi Note 12 4G யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated on 03-Jan-2024
HIGHLIGHTS

Redmi Note 13 Series சீரிஸின் வெளியீடு இப்போது மிக அருகில் உள்ளது

இந்த போன் முன்பு 14,999 ரூபாய்க்கு கிடைத்தது, இப்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.11,999 மற்றும் ரூ.13,999க்கு வாங்கலாம்

Redmi Note 13 Series சீரிஸின் வெளியீடு இப்போது மிக அருகில் உள்ளது, இது ரெட்மி நோட் 12 சீரிஸின் வாரிசாக இருக்கும், மேலும் நிறுவனம் அதற்காக நிறைய திட்டங்களை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இப்போது, ​​​​புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, சீன உற்பத்தியாளர் Redmi Note 12 4G யின் விலையை குறைத்துள்ளார். தெரியாதவர்களுக்கு, இந்த போன் முன்பு 14,999 ரூபாய்க்கு கிடைத்தது, இப்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Redmi Note 12 4G price drop in India

இப்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.11,999 மற்றும் ரூ.13,999க்கு வாங்கலாம். மேலும், வாடிக்கையாளர்கள் இதை வாங்குவதற்கு HDFC, SBI அல்லது AXIS பேங்க் கார்ட்களை பயன்படுத்தினால், அவர்கள் ரூ.1500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், இந்த போனின் விலை ரூ.10,499 மற்றும் ரூ.12,499 ஆகக் குறைக்கப்படும். இந்த போனை வாங்க நினைத்தால், லூனார் பிளாக், சன்ரைஸ் கோல்ட் மற்றும் ஐஸ் ப்ளூ வண்ண விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதற்க்கு முன்பு இந்த போன் தீபாவளி பண்டிகை சேலில் இதன் விலை குறைக்கப்பட்டிருந்தது, இருப்பினும் இது பிராண்டால் வழங்கப்படும் தள்ளுபடி மற்றும் இது ஒரு விலைக் குறைப்பு.

Note 12 4G சிறப்பம்சம்

Redmi Note 12 4G ஆனது 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1200 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Adreno 610 உடன் இணைக்கப்பட்ட Snapdragon 685 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க : Whatsapp 71 லட்ச மக்களின் அக்கவுண்ட் லோக் செய்யப்பட்டது காரணம் என்ன

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும் மற்றும் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 யில் வேலை செய்கிறது. இது 5000mAh பேட்டரியில் இயங்குகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது லிங்கை பொறுத்தவரை, போனில் இரட்டை சிம், 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் மற்றும் யூஎஸ்பி-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :