Redmi K70 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம், 50MP கேமரா கொண்டிருக்கும்

Redmi K70 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம், 50MP கேமரா கொண்டிருக்கும்
HIGHLIGHTS

Redmi K70 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது

Redmi K70, Redmi K70e மற்றும் Redmi K70 Pro ஆகியவற்றை வரிசையாக அறிமுகப்படுத்தியுள்ளது

Redmi K70 மற்றும் K70 Pro ஆகியவை 6.67 இன்ச் 2K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன.

Xiaomi யின் சப்-ப்ராண்ட் Redmi அதன் பிரபலமான Redmi K70 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது நிறுவனம் Redmi K70, Redmi K70e மற்றும் Redmi K70 Pro ஆகியவற்றை வரிசையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு வெளியான Redmi K60 க்கு அடுத்ததாக உள்ளது. இந்த சீரிஸின் இரண்டு மாடல்களான ரெட்மி கே70 மற்றும் ரெட்மி கே70 ப்ரோ பல ஒத்த சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன, சில இடங்களில் வேரியன்ட்கள் காணப்படுகின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.67 இன்ச் TCL C8 OLED டிஸ்ப்ளே மற்றும் 2K ரெசல்யூஷன் சப்போர்ட் மற்றும் 120Hz அப்டேட் வீதத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் அனைத்து சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Redmi K70, K70 Pro விலை மற்றும் விற்பனை

Redmi K70 மற்றும் K70 Pro ஆகியவை ப்ளாக் க்லேஸியர் சில்வர் பேம்பூ மூன் ப்ளூ மற்றும் லைட் பர்ப்பில்(இது புரோ வேரியண்டில் மட்டுமே) ஆகிய நான்கு வண்ண வகைகளில் வழங்கப்படுகின்றன, Redmi K70 இன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை CNY 2,499 (தோராயமாக ரூ. 29,700), 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை CNY 2,699 (தோராயமாக ரூ. 32,106), 512 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு CNY 2,999 (தோராயமாக ரூ. 35,300), மற்றும் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வேரியன்ட் CNY 3,399 (தோராயமாக ரூ. 40,000) ஆகும்.

இதேபோல், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய ரெட்மி கே70 ப்ரோவின் ஸ்டேடர்ட் வேரியன்ட் CNY 3299 (தோராயமாக ரூ. 39,300) யில் தொடங்குகிறது. இது 24 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் உடன் டாப் எண்ட் வெர்சன் வருகிறது, இதன் விலை CNY 4,399 (தோராயமாக ரூ. 52,400) ஆகும்.

ரெட்மி K70, K70 Pro சிறப்பம்சம்.

Redmi K70 மற்றும் K70 Pro ஆகியவை 6.67 இன்ச் 2K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. இதில் TCL C8 OLED பேனல் உள்ளது. இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 4000 nits யின் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. HDR10+ மற்றும் Dolby Vision ஆகியவை போனில் சப்போர்ட் செய்கிறது பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Airtel யின் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட பிளான்

கேமரா டிபார்ட்மென்ட் பார்த்தால், இரண்டு போன்களிலும் டிரிபிள் கேமரா செட்டப் உள்ளது. 50 மெகாபிக்சல்கள் கொண்ட ப்ரைம் கேமரா, OIS சப்போர்ட் கொண்டுள்ளது. வித்தியாசம் இரண்டாம் கேமராவில் வருகிறது. Redmi K70 ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. அதேசமயம் Redmi K70 Pro ஆனது 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமராவுடன் வருகின்றன.

Redmi K70 ஆனது Snapdragon 8 Gen 2 SoC கொண்டுள்ளது. Redmi K70 Pro ஆனது Snapdragon 8 Gen 3 ப்ரோசெசச்ர் கொண்டுள்ளது. இவை 5000 mm2 ஹீட் டேசிபெசன் கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் 5,000mAh பேட்டரி உள்ளது. இதில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் OS மூலம் இயங்குகின்றன. கனெக்டிவிட்டி அம்சங்களில் USB-C போர்ட், WiFi-7, NFC, IR பிளாஸ்டர், புளூடூத் 5.4 ஆகியவற்றுக்கான சப்போர்ட் அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo