digit zero1 awards

Xiaomi புதிய போன் மனதை மயக்கும் ஸ்டைலிஷ் உடன் பிப்ரவரி 14 அறிமுகமாகும்

Xiaomi புதிய போன் மனதை மயக்கும் ஸ்டைலிஷ் உடன் பிப்ரவரி 14 அறிமுகமாகும்
HIGHLIGHTS

Xiaomi மிக விரைவில் இந்தியாவில் ஒரு புதிய Redmi A-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது

ரெட்மி ஏ3 வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை,

இந்த ஸ்மார்ட்போன் காதலர் தினத்தன்று இந்தியாவிற்கு வரவுள்ளது,

Xiaomi மிக விரைவில் இந்தியாவில் ஒரு புதிய Redmi A-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இருப்பினும், ரெட்மி ஏ3 வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை, ஆனால் அதன் வெளியீட்டு தேதி சமீபத்திய அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் காதலர் தினத்தன்று இந்தியாவிற்கு வரவுள்ளது, மேலும் சில முக்கிய அம்சங்களும் டீசரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளன.

Xiaomi Redmi A3 அறிமுக தேதி.

சீன தொழில்நுட்ப ஜாம்பவான்Redmi A3 இந்தியாவில் பிப்ரவரி 14, 2024 அன்று வெளியிடப்படும். பிரத்யேக மைக்ரோசைட் பிராண்டின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்திலும் நேரலையில் வந்துள்ளது, இது சில சிறப்பம்சங்கள் வெளிப்படுத்துகிறது.

Redmi A3 Specifications

இந்த அப்கம்மிங் போனில் 90Hz ரெப்ராஸ் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்குகிறது மற்றும் இது டைப் C சார்ஜர் உடன் இதில் 5000mAh பேட்டரி கொண்டிருக்கும். இதை தவிர, இது 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி வெர்சுவல் ரேம் வரை சப்போர்ட் கொண்டிருக்கும். Redmi A3 இன் டிசைன் கூறுகளும் டீஸ் செய்யப்பட்டுள்ளன, இது பிரீமியம் ஹாலோ டிசைன் காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பின்புற பேனலில் ஒரு சர்குலர் கேமரா மாட்யுல் வழங்கப்படுகிறது, இதில் இமேஜ் சோர்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் மாட்யுல் ஆகியவை அடங்கும். டீஸர் பச்சை வண்ண விருப்பத்தைக் குறிக்கிறது.

இதையும் படிங்க Upcoming Smartphone: இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் டாப் சூப்பர் ஸ்மார்ட்போன்

துரதிர்ஷ்டவசமாக, வெப்சைட்டில் இதுவரை இந்த விவரங்கள் மட்டுமே பகிரப்பட்டுள்ளன. ஆனால் லீக்கள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில், இந்த போனில் 6.71-இன்ச் LCD பேனல் மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமராவுடன் வரும் என்று கூறலாம், அதே நேரத்தில் பின்புறத்தில் 13எம்பி இரட்டை கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாடெக் சிப்செட் இந்த போனில் கொடுக்கப்படலாம், இது 128 ஜிபி உள் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிசனில் இயங்கும் மற்றும் ஸ்டேடண்டர்ட் 10W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் Xiaomi இன் Redmi A3 பச்சை, நீலம் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று வதந்திகள் வருகின்றன. அடுத்த வாரம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியிட்டுக்கு பிறகு மேலும் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo