Xiaomi இறுதியாக இந்தியாவில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போனை அறிவித்துள்ளது. Redmi 14C 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் 5G கனேக்சனுடன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi 13C யின் வாரிசு மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ப்ரோசெசர் மற்றும் மூன்று கலர் விருப்பங்களைக் கொண்டுள்ளது. Redmi 14C இன் விலை, அம்சங்கள் மற்றும் விலை விற்பனை தகவல்களை பார்க்கலாம்.
டிஸ்ப்ளே :– இந்த போனில் 120HZ டிஸ்ப்ளே உடன் 6.88 இன்ச் உடன் இதில் பின்புற பேணல் கிளாஸ் இருக்கிறது, இந்த போனின் டிஸ்ப்ளேவில் கண் பாதுகாப்பிற்காக TuV Rheinland-சர்டிபிகேட் பேனலுடன் வருகிறது
ப்ரோசெசர்:-இந்த போனில் Qualcomm’s 4nm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14-அடிபடையின் கீழ் HyperOS யில் வேலை செய்கிறது
ரேம் ஸ்டோரேஜ்:-இந்த போன் மூன்று ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB+64GB,4GB+128GB மற்றும் 6GB+128GB வேரியன்ட் ஆகும்
கேமரா: இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50 MP ப்ரைமரி கேமராவுடன் 2 MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8 MP முன் கேமரா இருக்கிறது.
பேட்டரி:இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5160Mah பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர 33W 1999 மதிப்புள்ள சார்ஜர் இந்த பாக்ஸில் வரும்.
Redmi 14C விலையானது அடிப்படை 4GB+64GB வேரியன்ட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது. 4ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,999 மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.11,999. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஜனவரி 10, மதியம் 12 மணி முதல் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஸ்டார்கேஸ் பிளாக், ஸ்டார்டஸ்ட் பர்பிள் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ கலர்களில் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க:Itel புதிய போன் அறிமுகம் செய்ய தயார் இந்த தேதியில் காலத்தில் இறங்கும்