Xiaomi யின் சப் பிராண்ட் கடந்த ஒரு வாரமாக Redmi 14C 5G போனை பற்றி டீஸ் செய்யப்பட்டுள்ளது,இன்று நிறுவனம் போன் வெளியீட்டு தேதியையும் வெளியிட்டுள்ளது. Redmi 14C 5G ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மொபைலின் தயாரிப்புப் பக்கமும் பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டுள்ளது, அங்கு தொலைபேசியின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்களைக் காணலாம்.
Redmi 14C 5G வெளியீட்டு தேதி ஜனவரி 6, 2025. இந்த நாளில் இந்த மொபைல் போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். அதாவது ரெட்மி தனது போனை இந்திய சந்தை உட்பட மற்ற நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தும். 5G+5G சிம் சபோர்ட் மற்றும் 2.5Gbps வரையிலான இன்டர்நெட் ஸ்பீடை இந்த Redmi 5G போனில் அடையக்கூடிய இந்த பிரிவில் நம்பர் 1 5G என்டர்டைன்மென்ட் என நிறுவனம் அழைத்துள்ளது.
Redmi 14C ஸ்மார்ட்போன் Redmi 14R யின் ரீப்ரான்ட் வெர்சனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது). இது உண்மையாக இருந்தால், Redmi 14C ஆனது 6.88-இன்ச் LCD பேனலுடன் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் தொடங்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த போனில் 18W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் ஒரு பெரிய 5160mAh பேட்டரியில் இயங்கக்கூடும். இது தவிர, சாப்ட்வேர் பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் OS உடன் வரும். கேமராவைப் பொறுத்தவரை, இது 50MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமராவைப் பெறலாம்.
இந்த சாதனம் டூயல் 5ஜி சிம் உடன் வரும் என்று தொழில்நுட்ப நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தவிர, 50MP பிரைமரி கேமராவுடன் AI இமேஜிங் அம்சங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Lava யின் புதிய 5G போன் வெறும் ரூ,9499 யில் அறிமுகம், டாப் அம்சங்கள் பாருங்க