Redmi 13R 5G போன் அறிமுகம் இதன் டாப் 5 அம்சங்கள் பாருங்க

Updated on 08-Dec-2023

Redmi சமீபத்திய 5G ஸ்மார்ட்போனாக Redmi 13R 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 50 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் குறைந்த பட்ஜெட் போன். இதில் Dimensity 6100 Plus ப்ரோசெசர் உள்ளது. இந்த போனில் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இதில் இரட்டை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. அதன் விலை மற்றும் டாப் அம்சங்களை படி தெரிந்து கொள்ளலாம்.

Redmi 13R 5G விலை மற்றும் விற்பனை தகவல்.

Redmi 13R 5G நிறுவனம் சீனாவில் 999 யுவானுக்கு (தோராயமாக ரூ. 11,700) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. , இந்த போன் Star Rock Black, Fantasy Purple, மற்றும் Wave Water Green கலரில் அறிமுகம் செய்யப்பட்டது.

Redmi 13R 5G டாப் சிறப்பம்சம்.

Redmi 13R 5G டிஸ்ப்ளே

ரெட்மி13R 5G யின் சிறப்பம்சங்களை பார்த்தால், போனில் 6.74 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இது 1600 x 720 பிக்சல்கள் கொண்ட HD பிளஸ் பிக்சல் கொண்டுள்ளது போனில் ஹை ப்ரைட்னாஸ் 450 நிட்கள்.இருக்கிறது

ப்ரோசெசர்

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், Dimensity 6100 Plus சிப்செட்டைக் கொண்டுள்ளது. அதனுடன் நிறுவனம் 4 GB LPDDR4x ரேம் மற்றும் 128 GB UFS 2.2 ஸ்டோரேஜை இணைத்துள்ளது.

கேமரா

கேமராவைப் பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமராவுடன் வருகிறது. அதன் சப்போர்ட் ஒரு அக்சிலறி லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில், போனில் செல்பிக்கு 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி.

இதன் பேட்டரி திறன் 5000 mAh ஆகும். நிறுவனம் 18W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கியுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் இயங்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய அம்சம், இனி மீட்டிங்கின் பொது ம்யூசிக் கேக்கலாம்

கனெக்டிவிட்டி

கனேக்டிவிட்டிக்கு இதில் இரட்டை சிம், 5ஜி, யுஎஸ்பி டைப் சி போர்ட், மைக்ரோ SD கார்டு, 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன. சாதனத்தின் அளவு 168.05 x 77.91 x 8.19 மிமீ மற்றும் 195 கிராம் எடையுடையது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :