Redmi 13C மற்றும்13C 5G ஸ்மார்ட்போன் 7,999 ஆரம்ப விலையில் அறிமுகம்

Redmi 13C மற்றும்13C 5G ஸ்மார்ட்போன் 7,999 ஆரம்ப விலையில் அறிமுகம்
HIGHLIGHTS

Redmi 13C மற்றும் Redmi 13C 5ஜி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.7,999 முதல் ரூ.13,499 வரை கிடைக்கும்.

Redmi 13C ஆனது 6.74 இன்ச் HD + டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களான Redmi 13C மற்றும் Redmi 13C 5ஜி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.7,999 முதல் ரூ.13,499 வரை கிடைக்கும். Redmi 13C ஆனது 6.74 இன்ச் HD + டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. Redmi 13C மற்றும் 13C 5Gயின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Redmi 13C மற்றும் 13C 5G யின் விலை தகவல்.

விலையைப் பற்றி பேசினால், Redmi 13C யின் 4GB RAM/128GB வேரியண்டின் விலை ரூ.7,999. அதேசமயம் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.8,999. மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,499.ஆகும்

இது தவிர, Redmi 13C 5G யின் 4ஜிபி ரேம்/128ஜிபி வகையின் விலை ரூ.9,999, 6ஜிபி ரேம்/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,499 மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி வகையின் விலை ரூ.13,499.ஆகும்

இந்த ஸ்மார்ட்போன்களை Mi.com, Xiaomi Retail மற்றும் Amazon ஆகியவற்றிலிருந்து வாங்கலாம், ஐசிஐசிஐ பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். Redmi 13C டிசம்பர் 12 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும், Redmi 13C 5G டிசம்பர் 16 டிசம்பர் கிடைக்கும்.

Redmi 13C சிறப்பம்சம்.

Redmi 13C ஆனது 6.74 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 600 x 720 பிக்சல்கள் தீர்மானம், 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 450 nits வரை ஹை ப்ரைட்னாஸ் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இதில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உள்ளது, இதை விர்ச்சுவல் ரேம் வசதி மூலம் 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். 256ஜிபி வரை இண்டேனால் ஸ்டோரேஜ் உள்ளது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமராவை பற்றி பேசினால், Redmi 13C யின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 10W சார்ஜர் மட்டுமே போனில் வருகிறது.

ரெட்மி 13C 5G சிறப்பம்சம்

Redmi 13C 5G போனில் 6.74 இன்ச் HD + பிளஸ் டிஸ்ப்ளே இருக்கும். போனில் 90Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் வரும். போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்டுடன் வருகிறது. Mediatek Helio G85 சிப்செட் சப்போர்ட் போனில் கிடைக்கிறது. போனில் பாஸ்ட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் சப்போர்டுடன் வருகிறது. ஃபோனில் 50MP Ai டிரிபிள் ரியர் கேமரா செட்டிங் உள்ளது. பவர் பேக்கப்பிற்காக, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :BSNL ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான் தினமும் கிடைக்கும் 2GB டேட்டா

Redmi 13C 5G ஆனது Startrail Black, Startrail Silver மற்றும் Startrail Green நிற விருப்பங்களில் வாங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo