Redmi 13 5G இந்தியாவில் அறிமுகமாகும் தகவல் லீக்

Updated on 25-Jun-2024
HIGHLIGHTS

xiaomi இந்தியாவில் விரைவில் அதன் Redmi 13 5G மற்றொரு குறைந்த விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

Redmi 13 5G ஜூலை 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Redmi 12 5G யின் வெற்றியை தொடர்ந்து Redmi 13 5G அறிமுகம் செய்ய இருக்கிறது

xiaomi இந்தியாவில் விரைவில் அதன் Redmi 13 5G மற்றொரு குறைந்த விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய தயார் செய்கிறது. இந்த போன் ஒரு 5G பிரிவில் அறிமுகமாகும் இந்த போனை Redmi 12 5G யின் வெற்றியை தொடர்ந்து Redmi 13 5G அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இந்த போனின் அறிமுக தேதி மற்றும் மற்றும் லீக் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Redmi 13 5G அறிமுக தேதி

Redmi 13 5G அறிமுகம் பற்றி நாம் பேசினால், இந்த போன் ஜூலை 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போனின் டிசைன் ரெட்மி 12ஐப் போலவே இருக்கும். இருப்பினும், இரண்டு போன்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் தெரியும் வகையில், இந்த போனின் வடிவமைப்பில் நிறுவனம் சில மாற்றங்களைச் செய்யப் போவது மிகவும் முக்கியமானது.

#Redmi 13 5G அறிமுக தேதி

போன் ஒரு பாக்ஸி டிசைனை கொண்டிருக்கப் போகிறது, இது இரட்டை கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது, இது தவிர, டீஸரைப் பற்றி பேசினால், இந்த போன் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியிடப்படலாம். Redmi 13 ஐப் பொறுத்தவரை, நிறுவனம் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொண்டிருக்கப் போகிறது என்று கூறுகிறது. இதன் காரணமாக இந்த பட்ஜெட் போன் பிரீமியம் தோற்றத்தை பெற உள்ளது.

Redmi 13 5G எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

Redmi 13 5G போனில் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 108MP கேமரா சென்சார் வழங்கப்படுகிறது இது பிராண்ட் உறுதி செய்துள்ளது மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 SoCப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இந்த பிரிவில் இது ஒரு பெரிய டிஸ்ப்ளே கொண்ட 5G போனாக இருக்கும்.

Redmi 13 5G 1

இருப்பினும் இந்த போனின் டிஸ்ப்ளே விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே கூறியபடி Redmi 13 5G ஒரு பெரிய டிஸ்ப்லேவை கொண்டிருக்கப் போகிறது என்று நிறுவனம் கூறுகிறது. ஃபோனின் முன்பக்கத்தில் பஞ்ச்-ஹோல் நாட்ச் டிசைன் கிடைக்கப் போகிறது. இருப்பினும், இந்த போன் கொரில்லா கிளாஸ் 3 யின் பாதுகாப்பைப் வழங்கும் என்பது உறுதி. ரெட்மி 12 5ஜி பற்றி பேசினால், இந்த போனில் 6.79 இன்ச் LCD ஸ்க்ரீன் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சமீபத்திய போனில் அதே டிஸ்ப்லேவை பெறலாம், ஆனால் அது ஒரு பெரிய பேனலில் வைக்கப்படலாம்.

மேலும் இதன் பேட்டரி பற்றி பேசினால் இந்த போனில் இந்த போன் 5030எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக இருக்கும் என்று Amazon.inல் இருந்து தெரிய வருகிறது. இந்த பேட்டரி 33W பாஸ்ட் சார்ஜிங்குடன் போனில் கிடைக்கும். பெட்டியில் சார்ஜரையும் பெறலாம். தொலைபேசிகளுடன் சார்ஜர்களை வழங்குவதை நிறுவனம் இன்னும் நிறுத்தவில்லை. இருப்பினும், மற்ற விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Redmi 13 5G விலை தகவல்

Redmi 13 5G சில பெரிய அப்டேட்களுடன் இந்த விலையில் அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும், அதிக விலையில் போனை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிறுவனம் சில தள்ளுபடிகள் மற்றும் பிற வங்கி சலுகைகளை வழங்கலாம், அதன் பிறகு போனில் விலை கிட்டத்தட்ட அதே அளவிற்கு குறையும். இருப்பினும், விலை இன்னும் வெளியிடப்படவில்லை, எனவே நீங்கள் போன் வெளியீட்டிற்கு காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :