மீடியாடெக் ஹீலியோ G85 SoC ப்ரோசெசருடன் அறிமுகமானது Redmi 12C ஸ்மார்ட்போன்.
சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
தற்போது அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி 12C என அழைக்கப்படுகிறது.
ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் விலை 699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 385 என துவங்குகிறது
சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் ரெட்மி பிராண்டின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் மற்றும் அக்ஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி 12C என அழைக்கப்படுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் விலை 699 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 385 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 899 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 784 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை விற்பனை தற்போது மெயின்லேண்ட் சீனாவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.
ரெட்மி 12C சிறப்பம்சம்.
இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.71 இன்ச் HD+ ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், LPDDR4X ரேம், eMMC 5.1 ஃபிளாஷ் மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல்- கைகளில் இருந்து நழுவாத வகையில் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் மற்றும் ஸ்டிரைப்கள் உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile