Red Hydrogen One ஸ்மார்ட்போன் அறிமுகம்

Red Hydrogen One ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹயர் வேரியண்ட்  நிறுவனமாக இருக்கும் ரெட், மொபைல் போன் சந்தையில் களம் கண்டது. கடந்த ஆண்டு ரெட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட் ஹைட்ரஜன் ஒன் உலகின் முதல் ஹாலோகிராஃபிக் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

டியூரபில் கார்பன் பைபர், இன்ட்யூட்டிவ், ரெட் டிசைன் செய்யப்பட்ட பக்கவாட்டுகள் மற்றும் கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் JPEG வடிவில் சேமிக்கப்படுகின்றன. இதனால் அவை மற்ற மொபைல்களில் வழக்கமான போட்டோக்கள் போன்று தெரியும் 

இந்த ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD 4-வியூ லைட்ஃபீல்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. நானோ தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், டிஸ்ப்ளே மிகவும் தெளிவாகவும், நிறங்களை புதுவித முறையில் பிரதிபலிக்கும். இதில் உள்ள ஹாலோகிராஃபிக் 4-வியூ ரெக்கார்டிங் முன்புறம் மற்றும் பின்பக்கம் 3D அனுபவம் வழங்குகிறது. 

ரெட் ஹைட்ரஜன் ஒன் ஸ்மார்ட்போன் A3D மல்டி-டைமென்ஷனல் சரவுன்ட் சவுன்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் மாட்யூலர், சினிமா திறன் கொண்ட மீடியா மெஷின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் போனின் பேட்டரி பேக்கப், மெமரியை அதிகப்படுத்தவும் கேமரா மாட்யூல் லென்ஸ் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாட்யூல்கள் 2019ம் ஆண்டில் கிடைக்கும்.

இன்ஸ்டாகிராம் போன்று 3D போட்டோக்களை பகிர்ந்து கொள்வதற்கு என ஹோலோபிக்ஸ் எனும் ஆப் கொண்டிருக்கிறது. விரைவில் ஃபேஸ்டைம் போன்ற ரியல்-டைம் 3D ஆப் வழங்கப்படுகிறது. ஹைட்ரோஜன் நெட்வொர்க் சேவை திரைப்படம் மற்றும் வீடியோவினை கட்டணம் மற்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Red Hydrogen One ஸ்மார்ட்போன்  சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. LTPS-TFT டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 6 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. மெமரி அலுமினியம்
– 6 ஜி.பி. ரேம் / 256 ஜி.பி. மெமரி டைட்டானியம்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்.பி. டூயல் ஸ்டீரியோ பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
– 8 எம்.பி. டூயல் ஸ்டீரியோ முன்பக்க கேமராக்கள்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்.
– 4500mah. பேட்டரி

ரெட் ஹைட்ரஜன் ஒன் ஸ்மார்ட்போனின் அலுமினியம் வெர்ஷன் 1195 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.87,550 என்றும், டைட்டானியம் வெர்ஷன் விலை 1595 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.1,16,770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo