Realme யின் க்ளோபல் டிபிரிவின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக டீஸ் செய்ய ஆரம்பித்துள்ளது, இதன் தகவல் தற்பொழுது ட்விட்டரில் டீஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த போனில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த போனின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இது வரவிருக்கும் Realme GT 5 Pro ஃபிளாக்ஷிப் ஃபோனாகவோ அல்லது புதிய மிட் ரேன்ஜ் ஃபோனாகவோ இருக்கலாம், அது சிறந்த போட்டோ திறன்களுடன் வரும்.
மேலே இருக்கும் டீசரில் காணப்படுவது போல், இந்த Realme போனில் ஒரு ரவுண்ட் கேமரா மாட்யுளை கொண்டுள்ளது. இதில் ஒரு ரெக்டங்குளர் யூனிட் கொண்டுள்ளது இது இரண்டு கேமரா ரிங்கள் மற்றும் ஒரு பெரிஸ்கோப் ஜூம் கேமராவாகத் தோன்றும்
Realme சமிபத்தில் Realme GT ப்ளக்ஷிப் போனைசீனாவில் அறிமுகம், செய்யப்பட்டது, நிறுவனம் இப்போது Realme GT 5 Pro என்று அழைக்கப்படும் இன்னும் பவர்புல் போனில் வேலை செய்கிறது. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் வரும் முதல் போன் இதுவாக இருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இந்த Snapdragon 8 Gen 3 பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு சீனாவிற்குள் நுழையுமா அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஒரு சமிபத்திய Weibo போஸ்டின் படி ஒரு வித்தியாசமான கதை வெளிவந்துள்ளது. டிப்ஸ்டரின் படி Realme யிலிருந்து ஒரு புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சந்தையில் வரப் போகிறது மற்றும் அதில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும். டிப்ஸ்டர் போனின் பெயரை வெளியிடவில்லை, ஆனால் அதன் போட்டோ எடுக்கும் திறன் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார், இது பொதுவாக இந்த பிரிவில் காணப்படாத பர்போமான்ஸ் வழங்குகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள டீசரின் படி இது iPhone 15 series, அறிமுகத்திற்க்கு பிறகு தோன்றியது மேலும் இதை படிக்கும்போது இதில் “Not Only Max can zoom” என எழுதப்பட்டுள்ளது, இதை நினைகூர்த்ந்தால் iPhone 15 Pro Max ஆனது 5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் வரும் ஆப்பிளின் முதல் போனகும் இந்த வழியில், Realme யின் வரவிருக்கும் தொலைபேசி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை விட மிகக் குறைந்த விலையில் அதிக ஆப்டிகல் ஜூம் வழங்கும் என்று போஸ்டர் சொல்ல விரும்புகிறது.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.