Realme அதன் குறைந்த விலையில் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்
Realme சத்தமில்லாமல் அதன் V சீரிஸ் இரண்டு புதிய போனை அறிமுகம் செய்தது
சமிபத்தின் ஒரு அறிக்கையில் இந்த இரண்டு போன் விரைவில் அறிமுகமாகும்
நிறுவனம் Realme V60, V60s ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
Realme சத்தமில்லாமல் அதன் V சீரிஸ் இரண்டு புதிய போனை அறிமுகம் செய்தது, சமிபத்தின் ஒரு அறிக்கையில் இந்த இரண்டு போன் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளிவந்தது, ஆனால் நிறுவனம் Realme V60 மற்றும் V60s அறிமுகம் செய்யும். இந்த இரண்டு போனிலும் சிங்கிள் பின் கேமரா மற்றும் ஒரே மாதுரியான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது சரி வாருங்கள் இதன் முழு அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்வோம்.
Realme V60, V60s விலை தகவல்.
நிறுவனம் Realme V60, V60s ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Realme V60 இன் 6 ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை 1199 யுவான் (தோராயமாக ரூ. 13,500) மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை 1399 யுவான் (தோராயமாக ரூ. 16,000).
6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Realme V60s யின் அடிப்படை வேரியன்ட் 1,399 யுவான் (தோராயமாக ரூ. 16,000) மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் 1,799 யுவான் (தோராயமாக ரூ. 20,500) ஆகும். இவை இரண்டு கலர் வகைகளில் வருகின்றன – Star Gold மற்றும் Turquoise ஆகும்.
Realme V60, V60s சிறப்பம்சம்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களுடன் வருகின்றன. ஃபோனில் 6.67 இன்ச் HD + பேனல் 120Hz ரெப்ராஸ் ரேட் உள்ளது. இது 720 x 1604 பிக்சல் ரேசளுசன் கொண்டது. டிஸ்ப்ளே 625 நைட்ஸ் ஹை பரைத்னாஸ் கொண்டுள்ளது. அதன் ஸ்க்ரீன் 1 நிட் வரை டிம்மாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த இரண்டு போனிலும் 5G கனெக்டிவிட்டி இருக்கிறது அவற்றில் அவற்றின் டிசைன் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் அல்லது 8 ஜிபி ரேம் என்ற விருப்பம் உள்ளது. 6 ஜிபி ரேமுடன் 128 ஜிபி சேமிப்பகமும், 8 ஜிபி ரேமுடன் 256 ஜிபி சேமிப்பகமும் இந்த போனில் உள்ளது. இது தவிர, விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்டும் இதில் வழங்கப்படுகிறது. அதன் உதவியுடன், ரேமை மேலும் 8 ஜிபி வரை அதிகரிக்க் முடியும்.
மேலும் இந்த போனில் Android 14 OS உடன் வருகிறது, மற்றும் இதில் Realme UI 5.0 யின் கஸ்டம் ஸ்கின் வழங்கப்படுகிறது இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 10W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் பின்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. நிறுவனம் இங்கு ஒரு கேமராவை மட்டுமே வழங்கியுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இதையும் படிங்க: Infinix Note 40 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile