ரியல்மி இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களான Realme V50 மற்றும் Realme V50s ஆகியவற்றை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டும் வெவ்வேறு பெயர்களைத் கொண்டுள்ளதே தவிர இவை ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன, இருப்பினும், ஒன்று விலை உயர்ந்தது மற்றும் ஒன்று விலை குறைவானது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேமரா மற்றும் சார்ஜிங் ஸ்பீட் வித்தியாசமாக இருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன்கள் ரியல்மி 11x ஐப் போலவே தோற்றமளிக்கின்றன. ரியல்மி யின் புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
சீனா சந்தையின் படி Realme V50 6GBரேம் + 128GB ஸ்டோரேஜ் – ¥1,199 (~$165)ஆகும்
8GBரேம் + 256GBஸ்டோரேஜ் விலை ¥1,399 (~$195) ஆகும்.
6GBரேம் + 128GB ஸ்டோரேஜ் – ¥1,499 (~$210)ஆகும்
8GB ரேம் + 256GBஸ்டோரேஜ் – ¥1,799 (~$250)ஆகும்.
ரியல்மி V50 யில் 6.72 இன்ச் பன்ச் ஹோல் LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் FHD+ 2400 x 1080 பிக்சல் ரேசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றும் ரெப்ரஸ் ரேட் 120Hz மற்றும் பீக் ப்ரைட்னஸ் 680 நிட்ஸ் வரை இருக்கிறது
இந்த ஸ்மார்ட்போன்களில் MediaTek Dimensity 6100 Plus சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இயக்க முறைமையைப் பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மி UI 4.0 யில் வேலை செய்கிறது. ரியல்மி V50 சீரிஸ் ஒரு பிளாட் ஃப்ரேம் வடிவமைப்பு மற்றும் வட்ட கேமரா மாட்யூலைக் கொண்டுள்ளது. அவற்றின் தடிமன் 7.89 மிமீ மற்றும் எடை 190 கிராம். ஆகும்.
இதையும் படிங்க: Jio வின் செம்ம பிளான் 3GB டேட்டா உடன் 2GB டேட்டா இலவசமாக கிடைக்கும்
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது மற்றும் இரண்டாவது கேமரா பற்றிய எந்த தகவலும் இல்லை. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார், 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆகியவை உள்ளன. இந்த ஃபோனில் 10W அல்லது 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும். 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி V50 மற்றும் ரியல்மி V50s ஆகியவை Realme 11x போன்றது, இது 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சார்ஜிங் கொண்டுள்ளது.