மிகவும் பிரபல சீனா ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme அதன் Realme P3 மற்றும் Realme P3 Ultra ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இது இந்திய சந்தையில் மிக சிறந்த பர்போமான்ஸ் மற்றும் கேமரா அம்சங்களுடன் வருகிறது அதாவது இது MediaTek Dimensity 8350 Ultra ப்ரோசெசருடன் வருகிறது இந்த இரு போனின் விலை டாப் அம்சங்கள் பாருங்க.
realme P3 5G ப்ரோசெசர்
- டிஸ்ப்ளே:- இது 6.67-இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) முழு HD+ AMOLED திரையைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன், 1500Hz டச் ரேட் மற்றும் 2000 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
- ப்ரோசெசர்:- இந்த போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 4 (4nm) ஆக்டா-கோர் செயலி (2.3GHz வரை), கிராபிக்ஸிற்கான அட்ரினோ 810 GPU உள்ளது.
- ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:- இந்த போனில் 6GB / 8GB LPDDR4X RAM மற்றும் 128GB / 256GB UFS 3.1 சேமிப்பு உள்ளது. அதே நேரத்தில், இந்த போன் ஆண்ட்ராய்டு 6.0 உடன் realme UI 15 யில் இயங்குகிறது.
- கேமரா :- இந்த போனில் 50MP (f/1.8 அப்ரட்ஜர் ) + 2MP போர்ட்ரெய்ட் கேமரா, பின்புறத்தில் LED ஃபிளாஷ் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 16MP (f/2.4 அப்ரட்ஜர்) கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- பேட்டரி:- இந்த ஃபோனில் 6000mAh (வழக்கமான) பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
- கனெக்டிவிட்டி :- போனில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6 (2.4GHz + 5GHz), புளூடூத் 5.2, Beidou/GPS/GLONASS/Galileo/QZSS, NFC, USB Type-C ஆகியவை உள்ளன.
- மற்றவை :-இந்த போனில் USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும், போனின் சைஸ் 163.15×75.65×7.97mm மற்றும் அதன் எடை 194 கிராம்.
Realme P3 Ultra டாப் அம்சம்
- டிஸ்ப்ளே மற்றும் டிசைன் :- இந்த போனின் டிச்ப்லேவை பற்றி பேசினால் Realme P3 Ultra 5G ஆனது 1.5K குவாட்-கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3840Hz PWM உடன் வருகிறது, இது கண்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் 2500Hz இன்ஸ்டன்ட் டச் வேரியன்ட் கொண்டுள்ளது.
- பர்போமான்ஸ்:- Realme P3 Ultra 5G ஆனது Dimensity 8350 Ultra 5G சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது 4nm செயல்பாட்டில் தயாரிக்கப்படுகிறது. இதை தவிர ரேம் ஸ்டோரேஜ் 12GB LPDDR5X RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
- ஒப்பரேட்டிங் சிஸ்டம் :-Realme P3 Ultra 5G ஸ்மார்ட்போன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட Realme UI 6.0 உடன் வருகிறது, இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்டது.
- கேமரா:- இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் சோனி IMX896 OIS 50MP ப்ரைமரி பின்புற கேமரா உள்ளது, இது சிறந்த போட்டோவை எடுக்கலாம். இது 8MP அல்ட்ரா வைட் லென்ஸைக் கொண்டுள்ளது. பிராண்டின் கூற்றுப்படி, இந்தப் பிரிவில் 4K 60FPS வீடியோ ரெக்கார்ட் சப்போர்ட் செய்யும் முதல் போன் இதுவாகும். இதன் AI அம்சங்களில் AI Eraser, AI Best Face மற்றும் AI Motion Deblur ஆகியவை அடங்கும், அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 32MP முன் கேமரா உள்ளது.
- பேட்டரி:- இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் இந்த போனில் 6,000 mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது
Realme P3 விலை
Realme P3 ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.16,999 யில் தொடங்குகிறது. 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.17,999 ஆகவும், 8GB RAM + 256GB சேமிப்பு வகையின் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரை சேமிக்கலாம்.
Realme P3 Ultra விலை
ரியல்மி பி3 அல்ட்ராவின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.26,999. 8ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.27,999 மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.29,999. கஸ்டமர்கள் ரூ.4,000 (ரூ.3,000 வங்கி சலுகை மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்) தள்ளுபடியை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சேமிக்க முடியும். இந்த சாதனம் மார்ச் 25 முதல் விற்பனைக்கு வரும். இன்று மதியம் 2 மணி முதல் புக்கிங் செய்யலாம்.
இதையும் படிங்க:50MP கேமராவுடன் Samsung யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.