Realme P2 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் இதிலிருக்கும் சுவாரசியம் அம்சம்

Updated on 13-Sep-2024
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் அதன்P சீரிஸ் யின் புதிய ஸ்மார்ட்போன் Realme P2 Pro 5G அறிமுகப்படுத்தியது

இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் உள்ளது

Realme P2 Pro 5G யின் அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் விலை பற்றி அம்சங்களை பார்க்கலாம்

Realme இந்திய சந்தையில் அதன்P சீரிஸ் யின் புதிய ஸ்மார்ட்போன் Realme P2 Pro 5G அறிமுகப்படுத்தியது, P2 Pro 5G ஆனது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. Realme P2 Pro 5G யின் அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் விலை பற்றி அம்சங்களை பார்க்கலாம்.

Realme P2 Pro 5G விலை

Realme P2 Pro 5G இன் 8ஜிபி/128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.21,999, 12ஜிபி/256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.24,999 மற்றும் 12ஜிபி/512ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.27,999. இந்த ஸ்மார்ட்போன் Parrot Green மற்றும் Eagle Gray கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போனை Realme.com, Flipkart மற்றும் ஆப்லைன் ஸ்டோரில் வாங்கலாம் இதன் அளிபர்ட் சேல் செப்டம்பர் 17ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும். கஸ்டமர்கள் 12ஜிபி/256ஜிபி மற்றும் 12ஜிபி/512ஜிபி வகைகளில் பிளாட் ரூ.2,000 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.1,000 பேங்க் தள்ளுபடியைப் பெறலாம்.

Realme P2 Pro 5G சிறப்பம்சம்.

Realme P2 Pro ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ வளைந்த Samsung AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் 240Hz டச் வேரியன்ட் வீதத்தையும் கொண்டுள்ளது. இது தவிர, போனின் பிரகாசம் 1200 நிட்கள். இதில் நீங்கள் ProXDR 2160PWM சப்போர்டை பெறலாம்.

இந்த போனில் Adreno 710 GPU உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7S Gen 2 செயலி உள்ளது. ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128GB/256GB/512GB UFS 3.1 ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் வேலை செய்கிறது.

கெமர பற்றி பேசுகையில் இதில் , இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் முன் பேஸிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இந்த போனில் இந்த போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி உள்ளது. ஆடியோ செட்டிங்கில் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை -ரெஸ் ஆடியோ ஆகியவை அடங்கும். டைமென்சன் மாணங்களைப் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 161.34 மிமீ, அகலம் 73.91 mm, திக்னஸ் 8.21 மிமீ மற்றும் எடை 180 கிராம். கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.2, இரட்டை அதிர்வெண் GPS/GLONASS/Beidou, USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:: HMD யின் இரண்டு போன் அறிமுகம், YouTube, UPI போன்ற அம்சத்துடன் வரும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :