Realme P1 Speed 5G போன் அறிமுகம் மேலும் அறிமுக சலுகையாக 2000 டிஸ்கவுன்ட்

Updated on 15-Oct-2024
HIGHLIGHTS

Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் மிட் ரேன்ஜ் பிரிவில் 5G Realme P1 Speed 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் டிமான்சிட்டி 7300 எனர்ஜி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது

Realme P1 Speed 5G யின் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 17,999ரூபாய்

Realme இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் மிட் ரேன்ஜ் பிரிவில் 5G Realme P1 Speed 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் டிமான்சிட்டி 7300 எனர்ஜி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது Realme P1 Speed ​​5G யின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme P1 Speed 5G யின் விலை

Realme P1 Speed 5G யின் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 17,999ரூபாய் மற்றும் 12GB+256GBஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 20,999ரூபாயாக இருக்கிறது, மேலும் இந்த போன் Brushed Blue மற்றும் Textured Titanium யில் இருக்கிறது

இந்த ஸ்மார்ட்போன் Realme.com மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. லிமிடெட் கூப்பனுக்குப் பிறகு ரூ. 2,000 சேமிக்க முடியும், அதன் பிறகு விலை ரூ.15,999 ஆகவும் ரூ.18,999 ஆகவும் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை அக்டோபர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறவுள்ளது.

Realme P1 Speed 5G சிறப்பம்சம்.

Realme P1 Speed 5G யில் 6.67 இன்ச் HD + AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது இதன் ரேசளுசன் 2400 ×1080 பிக்சல் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 2000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, டிஸ்ப்ளே ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது.

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், Mali-G615 MC2 GPU உடன் octa core MediaTek Dimension 7300 எனர்ஜி 4nm ப்ரோசெசர் கொண்டுள்ளது.இதில் 8GB / 12GB LPDDR4X ரேம் மற்றும் 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 அடிபடையின் கீழ் ரியல்மி UI5 யில் வேலை செய்கிறது

இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் இரட்டை 50MP ப்ரைமரி கேமரா உடன் f/1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் 2MP போர்ட்ரைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதே இதன் செல்பி பற்றி பேசுகையில் அது 16MP முன் கேமரா இருக்கிறது

மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது இதை தவிர இதில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது இதன் டைமென்சன் பற்றி பேசுகையில் இந்த போனின் நீளம் 161.7 mm, அகலம் 74.7 mm, திக்னஸ் 7.6 mm மற்றும் எடை 185 கிராம். இந்த போன் IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, டூயல் 4ஜி VoLTE, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 6, புளூடூத் 5.4, பீடோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, கியூஇசட்எஸ்எஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்

இதையும் படிங்க: Jio சத்தமில்லாமல் இரண்டு போனை அறிமுகம் செய்தது இதில் என்ன ஸ்பெசல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :