Realme Narzo N63 இந்தியாவில் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Realme Narzo N63 இந்தியாவில் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Realme Narzo N63 என்ற புதிய மாடலை இந்திய சந்தையில் Realme Narzo சீரிஸில் அறிமுகப்படுத்தியுள்ளது

ந்த ஸ்மார்ட்போன் Realme C63 ரீப்ரான்ட் ஆகும், இதை சில நாட்களுக்கு முன் இந்தோனோசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது,

Realme Narzo N63 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.7,999

Realme Narzo N63 என்ற புதிய மாடலை இந்திய சந்தையில் Realme Narzo சீரிஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme C63 ரீப்ரான்ட் ஆகும், இதை சில நாட்களுக்கு முன் இந்தோனோசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, பட்ஜெட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் வேகன் லெதர் பேக் பினிஷ் சரி இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Realme Narzo N63 Price & Availability

Realme Narzo N63 ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.7,999 மற்றும் 4GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.8,499 ஆகும். வெளியீட்டு ஆபர் விண்டோ மூடப்பட்ட பிறகு, இந்த மாடல்களின் விலை ரூ.8,499 மற்றும் ரூ.8,999 ஆக இருக்கும். Narzo N63 ஜூன் 10 முதல் Amazon மற்றும் Realme.com இல் விற்பனைக்கு வரும்.

Realme Narzo N63 டாப் அம்சம்

டிஸ்ப்ளே

Realme Narzo N63 ஆனது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 180Hz டச் செம்பளிங் ரேட் கொண்ட 6.74-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 450 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது

ப்ரோசெசர்

Realme Narzo N63 ஆனது UNISOC T612 octa-core ப்ரோசெசர் மற்றும் Mali-G57 GPU ப்ரோசெசரை கொண்டுள்ளது, இது 4ஜிபி 4GB LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி அல்லது 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 2டிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமரா

Realme Narzo N63 ஸ்மார்ட்போனில் கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட டெப்த் சென்சார் கொண்டுள்ளது. முன்புறம் f/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இது ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது.

கனெக்டிவிட்டி

டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 167.26 mmஅகலம் 76.67 mmதடிமன் 7.74 mm இதன் எடை: ட்விலைட் பர்பிள் வேரியன்ட் 189 கிராம் எடையும், லெதர் ப்ளூ வேரியன்ட் 191 கிராம் எடையும் கொண்டது. மற்ற அம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார், 3.5 mm ஆடியோ ஜாக் மற்றும் கீழே போர்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர் ஆகியவை அடங்கும். கனெக்டிவிட்டி விருப்பங்களில் இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.0, GPS + GLONASS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க Realme GT 6 அறிமுக தேதி வெளியானது எப்போ பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo