Realme அதன் ஸ்டைலிஷான ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.

Realme அதன் ஸ்டைலிஷான ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது.
HIGHLIGHTS

Realme ஏப்ரல் 12 புதன்கிழமையான இன்று Narzo N சீரிஸின் முதல் போனான Realme Narzo N55 அறிமுகம் செய்துள்ளது

இந்த போனை புதிய டிசைனுடன் அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனின் டிஸ்பிளே 6.72 இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது

ஸ்மார்ட்போன் ப்ராண்டான Realme ஏப்ரல் 12 புதன்கிழமையான இன்று Narzo N  சீரிஸின் முதல் போனான Realme Narzo N55 அறிமுகம் செய்துள்ளது, இந்த போனை புதிய டிசைனுடன் அறிமுகம் செய்துள்ளது.இந்த போனின்  டிஸ்பிளே 6.72  இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில்  MediaTek Helio G88 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  போனில்  என்ன சிறப்பு இருக்கிறது என்றை  முழுமையாக  பார்க்கலாம்.

Realme Narzo N55 யின் விலை தகவல்.

 Narzo N55 யின்  இந்த போன் இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இதன் 4 ஜிபி ரேம் ரூ.10,999 மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 6 ஜிபி ரேம் ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  பிரைம் ப்ளூ மற்றும் பிரைம் பிளாக் கலர் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் இந்தியாவிலிருந்து போனை வாங்கலாம். Realme Narzo N55 யின் சிறப்பு ஃபிளாஷ் விற்பனையை நாளை அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு Amazon மற்றும் Realme வலைத்தளங்களில் ரூ 1,000 வரை தள்ளுபடியுடன் வழங்குகிறது.

Realme Narzo N55 டாப் 5 சிறப்பம்சம்.

டிஸ்பிளே 

Narzo N சீரிஸின் முதல் போனான  Realme Narzo N55 யை 4G  கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த போனில்   6.72 இன்ச் முழு HD ப்ளஸ் IPS LCD டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  இதில் இது (1080X2400 பிக்சல்கள்) ரெஸலுசன், அப்டேட் வீதம் 90Hz, 180Hz டச் மற்றும் 680 nits ஹை ப்ரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது 

ப்ரோசெசர் 

மீடியா டெக் ஹீலியோ ஜி88 ப்ரோசெசர் மற்றும் LPDDR4X ரேம் 6 ஜிபி வரை போனில் ஆதரிக்கப்பட்டுள்ளது. Realme Narzo N55 போனில் 128  வரையிலான ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மைக்ரோ SD கார்ட் வழியாக  1TB  வரை அதிகரிக்கலாம், ஐபோன் 14 ப்ரோவின் டைனமிக் தீவைப் போன்று செயல்படும் கேப்சூல் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. போனில் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.மினி கேப்சூல் சார்ஜிங், பேட்டரி, டேட்டா உபயோகம் மற்றும் சில உடற்பயிற்சி தொடர்பான டேட்டாக்களையும் காட்டுகிறது. 

கேமரா 

Narzo N55 யில் டுயல்  கேமரா செட்டப் கொண்டுள்ளது, இதில் 64MP  பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, பின் கேமராவுடன் LED பிளாஷ் சப்போர்டுடன் வருகிறது, செல்பிக்கு இதில் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி 

Realme Narzo N5 யின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000mAh  பேட்டரியுடன் வருகிறது மேலும் இதில் 33W Sparwoof பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன்

கனெக்டிவிட்டி 

இந்த போனில் கனெக்டிவிட்டிக்காக 4G டூயல் சிம்,wifi ப்ளூடூத் மற்றும் சார்ஜிங்க்கு USB டைப் C சப்போர்ட் செய்யப்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo