Realme இந்தியாவில் ஏப்ரல் 24 அன்று ஒரு நிகழ்வை நடத்த இருக்கிறது, Narzo 70x 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பிராண்ட் முன்பே உறுதிப்படுத்தியது, இப்போது அதே நாளில் Narzo 70 5G அறிமுகப்படுத்தப்படும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. Realme Narzo 70x 5G மற்றும் Realme Narzo 70 5G யின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.
Realme யின் அதிகாரபூவ வெப்சைட்டில் படி Realme Narzo 70 5G யில் MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் அதிவேகமான போனாக வைத்திருக்கும். இது குளிரூட்டலுக்கான ஒரு பெரிய வேப்பர் சேம்பர் கொண்டிருக்கும், இது ஹெவி கேமிங்கின் போது ஹீட்டிங் வாய்ப்புகளை குறைக்கும். இந்த ஃபோனில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் AMOLED டிஸ்ப்ளே இருக்கும். கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா சென்சார் கொண்ட மூன்று கேமரா செட்டிங் கொண்டிருக்கும், இது ஒரு வட்ட தொகுதியில் வைக்கப்படும். ஃபோன் டூயல் டோன் ஃபினிஷையும் கொண்டுள்ளது.
Narzo 70x 5G பற்றிய முழுமையான தகவல்கள் வெளியீட்டு நேரத்தில் வெளியிடப்படும், ஆனால் மற்ற அம்சங்களுடன், இந்த ஃபோன் ரூ.12,000 பட்ஜெட்டில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோனில் 5,000mAh பேட்டரி இருக்கும், இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்
Realme சமீபத்தில் Realme P1 சீரிஸை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி பின்புற கேமரா மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கஸ்டமர்களுக்க்க ரூ.20,000க்கும் குறைவான பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: WhatsApp யில் இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் போட்டோ வீடியோ அனுப்ப முடியும்