Realme Narzo 60x 5G சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த போன் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளாஷ் சேல் Amazon மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது, இந்த போனின் மெயின் கேமரா 50MP A கேமராவுடன் வருகிறது. மேலும் இன்று இந்த போனின் விலை மற்றும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம்.
இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999. அதேசமயம், இரண்டாவது வேரியண்ட் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.14,499. இது நெபுலா பர்பில் மற்றும் ஸ்டெல்லர் கிரீன் நிறங்களில் வாங்கலாம். இதனுடன், 1,000 ரூபாய் கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படும். EMI, பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளும் இந்த போனில் கிடைக்கும் . மேலும் இதில் 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது , இதை தவிர இதில் வெல்கம் ஆபராக ரூ,100 வழங்கப்படுகிறது
இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.72 இன்ச் ஃபுல் HD பிளஸ் LCD டிஸ்ப்ளே உள்ளது. மேலும், 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம் மற்றும் 2400 x 1080 பிக்சல் ரேசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஹை பரைத்னாஸ் 680 நிட்ஸ் இருக்கிறது.
இந்த போன் Realme UI 4.0 அடிப்படையிலான Android 13 யில் வேலை செய்கிறது. இந்த ஃபோனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்ஷன் 6100+ ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஜிபி வரை ரேம் கொண்டுள்ளது, இது கிட்டத்தட்ட 12 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. மேலும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதில் இரட்டை பின்புற கேமராவுடன் வருகிறது. இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா உள்ளது. அதே நேரத்தில், 8 மெகாபிக்சல் செல்பிக்கு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஃபோனில் 5000 mAh பேட்டரி உள்ளது, இது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது தவிர, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.