சமீபத்தில் Realme நிறுவனம் Realme GT Neo5 SE போனை அறிமுகம் செய்தது, ரியால்மி இந்த போனின் முதல் விற்பனையில் ரெக்கார்டை முறியடித்தித்துள்ளது, ஏப்ரல் 10 அன்று இதன் முதல் விற்பனை நடைப்பெற்றது தற்பொழுது நொடிப்பொழுதில் அதனை போனாயும் விற்று தீர்த்தது
Realme GT Neo 5 SE விற்பனையில் அசத்தல் சாதனை பெற்றுள்ளது என்றே சொல்லலாம், சீனாவில் ஏப்ரல் 10 நன்று அதன் முதல் விற்பனையை தொடங்கியது, இந்த போனின் விலையை பற்றி பேசினால் சீனாவில் இதன் விலை 1999 யுவனாக இருக்கிறது (இந்திய விலை சுமார் 23 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது.) அதே நேரத்தில், வரிசையின் மேல் வேரியண்ட் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் விலை 2599 யுவான் (சுமார் 31 ஆயிரம் ரூபாய்). Weibo இல் நிறுவனம் செய்த போஸ்டின் படி, அதன் விற்பனை சீனாவில் சாதனை படைத்துள்ளது. விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சத்துக்கும் அதிகமான போன்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்த போனை Realme GT Neo சீரிஸ் அதிகம் விற்பனையாகும் போனாக மாற்றுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
Realme GT Neo 5 SE இன் விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், தொலைபேசியில் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் ஹை பிரைட்னஸ் 1450 நிட்கள்., இது 4nm ப்ரோசெசசிங் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதனத்தில் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0. இயங்குகிறது இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ Gen 2 ப்ரோசெசரை கொண்டுள்ளது
கேமரா பற்றி பேசுகையில் , அதில் 64MP ப்ரைம் சென்சார் காணப்படுகிறது, அதனுடன் OIS ஆதரிக்கப்படுகிறது. 8எம்பி அல்ட்ரா வைட் சென்சார் உள்ளது. மூன்றாவது சென்சாராக 2 மெகாபிக்சல் மைக்ரோஸ்கோபிக் கேமரா உள்ளது. செல்பி எடுக்க 16எம்பி கேமரா உள்ளது. போனில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்காரப்ரின்ட் ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷனை பற்றி பேசுகையில், இது 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11ac, ப்ளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type-C ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ஃபோனில் 5500mAh பேட்டரி உள்ளது, இதன் மூலம் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கப்படுகிறது. மற்றும் இதன் எடை 193.1 கிராம் ஆகும்.