Realme GT Neo 5 சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Realme GT Neo 5 ஆனது 240W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும், இது இந்த வேகமான சார்ஜிங் வேகத்துடன் வரும் உலகின் முதல் போனாகும்
ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எனினும், ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டு தேதி டீசரில் இடம்பெறவில்லை.
தற்போது ரியல்மி வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. எனினும், இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி நிறுவனம் சார்பில் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் 240 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 150 வாட் மற்றும் 240 வாட் என இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி GT 3 தவிர ரியல்மி நிறுவனம் கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் நாளை அறிமுகமாகிறது.