Realme யின் பவர்புல் அம்சத்துடன் சீனாவில் அறிமுகம் இந்திய தேதி பாருங்க
Realme திங்கட்கிழமை ஆன இன்று அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை realme GT 7 Pro சீனாவில் அறிமுகம் செய்தது
மேலும் இந்த போனில் 6.78 1.5K டிஸ்ப்ளே கொண்டுள்ளது
Realme GT 7 Pro இந்தியாவில் நவம்பர் 26 அறிமுகமாகும்
Realme திங்கட்கிழமை ஆன இன்று அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை realme GT 7 Pro சீனாவில் அறிமுகம் செய்தது, இந்த போனில் பல அதிரடி அம்சங்கள் இருக்கிறது . மேலும் இந்த போனில் 6.78 1.5K டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவலையும் பார்க்கலாம் இதன் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.
Realme GT 7 Pro சீனா விலை மற்றும் இந்தியாவின் எப்பொழுது அறிமுகமாகும்.
Realme GT 7 Pro Mars Orange, Star Trail Titanium மற்றும் வெள்ளை நிறங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை 3699 யுவான், சுமார் 43 ஆயிரம் ரூபாய். 16ஜிபி+256ஜிபி மாடலின் விலை 3899 யுவான் அதாவது சுமார் 46 ஆயிரம் ரூபாய். 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை 3999 யுவான் அதாவது சுமார் 47 ஆயிரம் ரூபாய்.மேலும் இதன் 16GB+512GB மாடலின் விலை யுவான் ஏறத்தாள இந்திய விலை 50ஆயிரம் இருக்கலாம் மற்றும் 16GB+1TB மாடல் விலை 4799யுவான் இந்திய விலை சுமார் 56ஆயிரம் இருக்கும்.
Realme GT 7 Pro இந்திய அறிமுக தகவல்
Realme GT 7 Pro இந்தியாவில் நவம்பர் 26 அறிமுகமாகும் மேலும் இதன் விற்பனை amazon மற்றும் Realme.com யில் விற்பனை செய்யப்படும்
Get ready to explore a new universe of power and performance! #GT7ProFirst8EliteFlagship?
— realme (@realmeIndia) November 4, 2024
The #realmeGT7Pro is launching in India on November 26th, 2024, at 12 PM.
Know more:https://t.co/2ESy9OWO4L https://t.co/7yZs3Cnf4n #amazonIndia #DarkHorseofAI #ExploreTheUnexplored pic.twitter.com/O9FXYuBGLt
realme GT 7 Pro சிறப்பம்சம்.
realme GT 7 Pro யில் 6.78 இன்ச் OLED ப்ளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, அதன் ரேசளுசன் 2780×1264 பிக்சல் பீக் ப்ரைட்னஸ் 6000 நிட்ஸ் இருக்கிறது.மேலும் இதன் டிஸ்ப்ளே டால்பி விஷன் சப்போர்ட் கொண்டுள்ளது.
Realme GT 7 Pro ஆனது Qualcomm இன் சமீபத்திய ப்ரோசெசரான Snapdragon 8 Elite கொண்டுள்ளது. Adreno 830 GPU உடன் கிடைக்கிறது. இது 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் விருப்பங்களில் வருகிறது மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது.
realme GT 7 Pro யில் லேட்டஸ்ட் Android 15 அடிபடையின் கீழ் realme UI 6.0 லேயர் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைம் பின்புற கேமரா உள்ளது. இது சோனி IMX906 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரிக்கிறது. இது தவிர, 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் 120X ஹைப்ரிட் ஜூம் கொண்ட 50 எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. மூன்றாவது கேமராவாக 8MP அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது மற்றும் செல்பி கேமரா 16 மேகபிக்சல் முன்பக்கத்தில் இருக்கிறது
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் அதிகபட்சமாக 6500Mah பேட்டரி மற்றும் 120w சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதன் மற்ற அம்சம் பற்றி பேசினால் இதில் இன்-டிஸ்ப்ளே அல்ட்ரா சோனி பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் வருகிறது இதனுடன் இதில் IP68 மற்றும் 69 மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மொபைலில் உள்ளன மற்றும் டைப்-சி சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது.
இதையும் படிங்க:Upcoming Smartphone: நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சூப்பர் போன்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile