Realme GT 7 Pro அறிமுகம் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாருங்க
Realme நேற்று இந்தியாவில் நடந்த நிகழ்வில் Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் ப்ரோசெசர் உள்ளது.
Realme GT 7 Pro யின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 59,999ரூபாயாக இருக்கிறது
Realme நேற்று இந்தியாவில் நடந்த நிகழ்வில் Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. GT 7 Pro ஆனது 6.78-இன்ச் 1.5K 8T LTPO eco² OLED பிளஸ் மைக்ரோ-கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் ப்ரோசெசர் உள்ளது. Realme GT 7 Pro யின் அம்சங்கள் மற்றும் சியரப்ப்ம்சங்களின் பல தகவலை பற்றி பார்க்கலாம்.
Realme GT 7 Pro விலை மற்றும் விற்பனை தகவல்.
Realme GT 7 Pro யின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 59,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 16GB + 512GB ஸ்டோரேஜ் விலை 65,999ரூபாய்க்கு வருகிறது.இந்த ஸ்மார்ட்போன் மார்ஸ் ஆரஞ்சு மற்றும் கேலக்ஸி கிரே வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 29 முதல் Realme இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களுடன் இ-காமர்ஸ் தளமான Amazon இல் விற்கப்படும், இது இன்று முதல் ரூ 999 க்கு ப்ரீ ஆர்டர் செய்யலாம்.
Introducing #realmeGT7Pro, powered by #GT7ProFirst8EliteFlagship. Experience lightning-fast performance, ultra-smooth gaming, and seamless multitasking—all starting at ₹56,999*.
— realme (@realmeIndia) November 26, 2024
Know more: https://t.co/8ZlhNQA5fY https://t.co/9lTyrFB3HH
#DarkHorseOfAI
அறிமுக சலுகையின் கீழ் இந்த போனில் பேங்க் ஆபர் கீழ் 3,000ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் ஸ்ட்டேன்டர்டாக 12 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அதிகபட்சமாக 12 மாதங்கள் எக்ஸ்டன்ட் வாரண்டி (ரூ. 3,449 வரை) நவம்பர் 28ஆம் தேதி வரை முன்பதிவு செய்து, நவம்பர் 29ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். அதேசமயம், நவம்பர் 28ஆம் தேதி வரை முன்பதிவு செய்து, நவம்பர் 29ஆம் தேதி முதல் விற்பனையில் ரூ.3,149 மதிப்புள்ள 12 மாத ஸ்கிரீன் டேமேஜ் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
Realme GT 7 Pro டாப் அம்சங்கள்
டிஸ்ப்ளே
Realme GT 7 Pro ஆனது 6.78-இன்ச் 8T LTPO Eco² OLED பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2780×1264 பிக்சல்கள் தீர்மானம், 6000 nits பீக் பிரகாசம் மற்றும் 2600Hz இன்ஸ்டன்ட் டச் ஸ்க்ரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ப்ரோசெசர்
இந்த போனில் 1100MHz Adreno 830 GPU உடன் octa core Snapdragon 8 Elite 3nm ப்ராசசர் உள்ளது. இந்த ஃபோன் 256GB/512GB (UFS 4.0) சேமிப்பகத்துடன் 12GB/16GB LPDDR5X ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
கேமரா
கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இந்த போனில் OIS சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் உடன் 50மெகாபிக்சல் யின் ப்ரைமரி கேமரா (Sony IMX906 சென்சார் ), f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா f/2.65 துளை மற்றும் 120x ஹைப்ரிட் ஜூம் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
இந்த ஃபோனில் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5800mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, தொலைபேசியின் நீளம் 162.45 மிமீ, அகலம் 76.89 மிமீ, தடிமன் 8.55 மிமீ மற்றும் எடை 220.2 கிராம் ஆகும்.
கனெக்டிவிட்டி
இந்த ஃபோன் IP68+IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7, புளூடூத் 5.4, GPS: L1+L5, GALILEO:E1+E5a, Beidou: B1I+B1C+B2a, QZSS:L1+L5, NFC மற்றும் USB வகை ஆகியவை அடங்கும். -சி சி போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:iQOO 13 இந்தியாவில் அறிமுக தேதி உடன் இந்த 5 விஷயத்தை தெருஞ்சிகாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile