Realme GT 7 Pro அல்ட்ரா சைனிங் பிங்கர்ப்ரின்ட் உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்

Updated on 04-Jun-2024
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme யின் GT 7 Pro விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இது ஜிடி 5 ப்ரோவை மாற்றும். GT 7 Pro பற்றிய அறிமுகம் குறித்த தகவலை நிறுவனம் தெரிவிக்கவில்லை

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் சில லீக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme யின் GT 7 Pro விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். இது ஜிடி 5 ப்ரோவின் மிக பெர்ய வெற்றின் காரணமாக . GT 7 Pro அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது இருப்பினும் இந்த போன் பற்றிய அறிமுகம் குறித்த தகவலை நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் சில லீக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குவால்காமின் அடுத்த ஜெனரேசன் ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

Realme GT 7 Pro specifications (expected)

Realme GT 7pro பற்றி பேசுகையில் Tipster Smart Pikachu சீனாவின் மெசேஜ் தளமான Weibo யின் ஒரு போஸ்ட்டில் GT 7 Pro ஆனது ஹை ஆப்டிகல் ஜூம் ஸ்டேட்டசுடன் கூடிய பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்கலாம் என்று வெளிப்படுத்தியது. பாதுகாப்பிற்காக அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இதில் இருக்கலாம். Qualcomm யின் வரவிருக்கும் Snapdragon 8 Gen 4 SoC இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்படலாம் என்று ஒரு லீக்கில் கூறப்பட்டது.

முன்னதாக, Realme GT 7 Pro ஆனது Qualcomm யின் இன்னும் அறிவிக்கப்படாத Snapdragon 8 Gen 4 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிப்செட் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகியவை இந்த சிப்செட்டுடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் போன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme இந்த போன் சீனாவில் இந்த SoC உடன் முதலில் அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கலாம், ஆனால் சீனாவிற்கு வெளியே உலகளாவிய சந்தைகளில் இந்த சிப்பை கொண்டு செல்லும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம்.

Realme GT 7 Pro launch timeline (expected)

Realme GT 5 Pro யின் மிக சிறந்த வெற்றி யின் காரணமாகவே Realme GT 7 Pro அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் கூறியது, Realme GT 5 Pro ஸ்மார்ட்போன் டிசம்பர் 2023 யில் அறிமுகம் செய்யப்பட்டது இது கிட்டத்தட்ட அதே மாதுரியான பெடர்னை அப்கம்மிங் Realme GT 7 Pro யிலும் இருக்கும் எனகொரப்படுகிறது

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Realme GT 6 இந்தியாவில் ஜூன் 20 அன்று அறிமுகம் செய்யப்படும்

இதையும் படிங்க OnePlus புதிய கலரில் ஸ்மார்ட்போன் அறிமுகம் சூப்பர் லுக் தருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :