Realme GT 5 Pro 1TB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம், இதன் சிறப்பு தகவலை பார்க்கலம்
Realme நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான Realme GT 5 Proவை அறிமுகம் செய்துள்ளது
. Realme GT 5 Pro யின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது.
. Realme GT 5 Pro ப்ரோவின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க
ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான Realme GT 5 Proவை அறிமுகம் செய்துள்ளது.ரியல்மியின் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 8T LTPO 1.5K OLED டிஸ்ப்ளே உள்ளது. Realme GT 5 Pro யின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. ரியல்மி ஜிடி 5 ப்ரோவின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme GT 5 Pro விலை மற்றும் விற்பனை தகவல்.
ரியல்மி GT 5 Pro யின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 3,399 யுவான் (தோராயமாக ரூ. 39,921). அதேசமயம் 16ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 3,699 யுவான் (தோராயமாக ரூ.43,339). 16ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 3,999 யுவான் (தோராயமாக ரூ.46,922). மற்றும் 16GB + 1TB வேரியண்டின் விலை 4,299 யுவான் (தோராயமாக ரூ. 50,423). ஆகும் இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போன் சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைத்துள்ளது மற்றும் முதல் விற்பனை டிசம்பர் 14, 2023 முதல் தொடங்கும்.
ரியல்மீ GT 5 Pro சிறப்பம்சம்
Realme GT 5 Pro யில் 6.78 இன்ச் LTPO 1.5K OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 144Hz ரெப்ரஸ் ரேட் 2160Hz PWM டிம்மிங் 2160Hz டச் செம்பளிங் ரேட் DC டிம்மிங் மற்றும் 1600 நிட்கள் வரை ப்ரைட்னாஸ் இருக்கிறது, Realme GT 5 Pro ஆனது Qualcomm Snapdragon 8 Gen 3 SoC கொண்டுள்ளது. ஸ்டோரேஜைபற்றி பேசுகையில், இந்த ஃபோனில் 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB UFS 4.0 சேமிப்பு உள்ளது. இந்த போனில் 5,400mAh பேட்டரி உள்ளது, இது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இதையும் படிங்க: Jio யின் புதிய அன்லிமிடெட் 5G டேட்டா பிளான் 84 நாட்கள் வேலிடிட்டி இந்த OTT சப்ச்க்ரிப்சன் இலவசமாக கிடைக்கும்
Realme GT 5 Pro யின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா. இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 க்கச்டமஸ் ஸ்கின்யில் வேலை செய்கிறது. நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் உறுதியளிக்கிறது. மற்ற அம்சங்களில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், VC கூலிங் சிஸ்டம், USB 3.2 போர்ட் மற்றும் AI சூப்பர் அசிஸ்டென்ட் ஆன்போர்டு ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile