Realme GT 5 Pro அறிமுக தேதி வெளியானது

Updated on 14-Nov-2023
HIGHLIGHTS

Realme GT 5 Pro இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த போனில் சமீபத்திய Snapdragon 8 Gen 3 SoC உள்ளது

Nubia Red Magic 9 Pro மற்றும் Honor 100 சீரிச்களை நவம்பர் 23 அன்று வெளியிடத் தயாராக உள்ளன

Realme GT 5 Pro இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். இந்த தகவலை வெய்போ போஸ்ட் மூலம் அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. இந்த போனில் சமீபத்திய Snapdragon 8 Gen 3 SoC உள்ளது. மேலும், இது 1TB ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் எந்த தேதியில் வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை ஆனால் கண்டிப்பாக இம்மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. Nubia மற்றும் Honor ஆகியவை தங்கள் Nubia Red Magic 9 Pro மற்றும் Honor 100 தொடர்களை நவம்பர் 23 அன்று வெளியிடத் தயாராக உள்ளன இத்தகைய சூழ்நிலையில், ரியல்மீ GT 5 Pro வெளியீட்டு நிகழ்வும் இந்த நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Realme GT 5 Pro கன்பர்ம்ட் சிறப்பம்சம்.

அறிமுகத்திற்க்கு முன்பே ரியல்மீ GT 5 Pro யின் பல தகவல் வெளிவந்துள்ளது அதில் ஒன்று Qualcomm இன் புதிய Snapdragon 8 Gen 3 SoC இருக்கிறது, இதில் 1 டிபி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 3000 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் கொண்டிருக்கும். முன்பை விட சிறந்த ஹீட் டிசிபெசன் டேக்னோலஜியுடன் இந்த ஃபோன் வழங்கப்படலாம், அதன் பரப்பளவு சுமார் 10000mm சதுரமாக இருக்கும் மற்றும் மேம்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ கேமராவுடன் வழங்கப்படும்.

இதையும் படிங்க:Jio மற்றும் Airtel அடுத்து Vodafone Idea VI 5G இந்த நகரங்களில் ஆரம்பம்

GT 5 Pro எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள்

ரியல்மீ GT 5 Pro யின் TENAA பட்டியலின் படி, இது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். இதன் பிக்சல் ரேசளுசன் 1264×2780. இது 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் விருப்பங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பங்களும் வழங்கப்படலாம்.

Realme GT5 Pro confirmed features

இது டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் Sony LYTIA LYT808, இரண்டாவது 50 மெகாபிக்சல் OV08D10 சென்சார் ம ற்றும் 8 மெகாபிக்சல் Sony IMX890 டெலிஃபோட்டோ சென்சார் கொடுக்கப்படலாம். செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படலாம். ரியல்மீ GT 5 Pro ஆனது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 5400mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :