Realme C75 அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Realme C75 அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Realme தனது புதிய ஸ்மார்ட்போனான Realme C75 அறிமுகப்படுத்தியுள்ளது

Realme C75 வியட்நாமில் லைட்னிங் கோல்ட் மற்றும் பிளாக் ஸ்டாம் நைட் கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

நிறுவனம் விரைவில் C75 ஐ மற்ற சந்தைகளுக்கும் கொண்டு வரலாம்.

Realme தனது புதிய ஸ்மார்ட்போனான Realme C75 அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பட்ஜெட் பிரன்ட்லி C-சீரிஸை வியட்நாமில் விரிவுபடுத்துகிறது. C75 ஆனது 6.72 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Realme C75 யின் அம்சங்கள் மற்றும் இதன் டாப் அம்சங்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Realme C75 விலை

Realme C75 வியட்நாமில் லைட்னிங் கோல்ட் மற்றும் பிளாக் ஸ்டாம் நைட் கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விலை தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது ஒரு குறைந்த விலை போனாக இருக்கும். நிறுவனம் விரைவில் C75 ஐ மற்ற சந்தைகளுக்கும் கொண்டு வரலாம்.

Realme C75 டாப் அம்சங்கள்

டிசைன்

அதிர்ச்சிகள் மற்றும் சொட்டுகளைத் தாங்கக்கூடிய ஆர்மர்ஷெல் டெம்பர்டு கிளாஸ் ஸ்க்ரீன் உடன் இணைக்கப்பட்ட தாக்கத்தை உறிஞ்சும் டிசைனை இந்த போன் கொண்டுள்ளது என்று Realme கூறுகிறது.

டிஸ்ப்ளே

Realme C75 யில் 6.72 இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் முழு HD பிளஸ் தெளிவுத்திறன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Helio G92 Max வழங்கப்படுகிறது C75 அதன் வலுவான உருவாக்க தரம் காரணமாக அதிக நன்மைகளை வழங்குகிறது, இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் வேலை செய்கிறது.

கேமரா

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் , C75 இன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் , 6,000mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இதனால் இது ஒரு பவர் பேங்காக வேலை செய்ய முடியும் மற்றும் நீங்கள் போனிலிருந்து மற்ற போன்களையும் சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:iQOO 13 இந்தியாவில் அறிமுக தேதி உடன் இந்த 5 விஷயத்தை தெருஞ்சிகாங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo