Realme C67 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது, இதன் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க

Updated on 20-Dec-2023
HIGHLIGHTS

Realme கடந்த வாரம் இந்தியாவில் தனது பட்ஜெட் 5G போனை அறிமுகப்படுத்தியது,

இன்று அந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையாகும். இந்த போனில் பெயர் Realme C67 5G

Realme C67 5G யின் முதல் விற்பனை Flipkart மற்றும் Realme India வெப்சைட்டில் இன்று 12 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது

Realme கடந்த வாரம் இந்தியாவில் தனது பட்ஜெட் 5G போனை அறிமுகப்படுத்தியது, இன்று அந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையாகும். இந்த போனின் பெயர் Realme C67 5G. முதல் விற்பனையின் மூலம் இந்த போனில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Realme C67 5G யின் முதல் விற்பனை Flipkart மற்றும் Realme India வெப்சைட்டில் இன்று 12 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது இந்த விற்பனையின் போது, ​​ரூ.1000 பேங்க் சலுகைகளும், ரூ.500 கூப்பன் சலுகையும் கிடைக்கும். 1500 தள்ளுபடியின் மொத்தப் பலனைப் பெறலாம். வாருங்கள், இந்த மொபைலின் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க

Realme C67 5G விலை மற்றும் ஆபர் தகவல்

Realme C67 5G இரண்டு கான்பிக்ரேசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அவை 4GB + 128GB சேமிப்பு மற்றும் 6GB + 128GB சேமிப்பகத்தில் வருகின்றன. ஆரம்ப வேரியண்டின் விலை ரூ.13999, அதே சமயம் 6ஜிபி ரேமின் விலை ரூ.14999. இந்த இரண்டு வகைகளிலும் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

C67 5G சிறப்பம்சம்.

Realme C67 5G யில் 6.72-inch FullHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது., இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz மற்றும் ஹை பிரகாசம் 680 nits ஆகும். இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் 33W SuperVOOC சார்ஜர் உள்ளது. நிறுவனம் கூறுகிறது, இது 29 நிமிடங்கள் 0-50 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும்.

இதன் ப்ரோசெச்சர் MediaTek Dimensity 6100+ டிமான்சிட்டி சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது,
இது அதிகபட்சமாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். நீங்கள் அதில் 2TB வரையிலான மைக்ரோ SD கார்டைச் செருகலாம், அதைத் தனியாக வாங்க வேண்டும்

இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதில் டுயல் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது,, இதில் முதன்மை கேமரா 50எம்பி. இரண்டாம் நிலை கேமரா 2MP Porait சென்சார் ஆகும். வீடியோ கால்கள் மற்றும் செல்ஃபிக்களுக்கு 8எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. செக்யுரிட்டிகாக இதில் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க: BSNL அதன் குறைந்த விலை பரோட்பேண்ட் திட்டத்தை நீக்கவுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :