Realme C67 4G வேரியன்ட் தகவல் லீக், டிசம்பர் 14 அறிமுகமாகும்

Updated on 08-Dec-2023
HIGHLIGHTS

Realme C67 5G இந்தியாவில் டிசம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போனின் டிசைன் மற்றும் நிறத்தை நிறுவனம் டீஸ் செய்துள்ளது

Xiaomiயின் Redmi 13C 5G உடன் போட்டியாக இருக்கும்

Realme C67 5G இந்தியாவில் டிசம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. போனின் டிசைன் மற்றும் நிறத்தை நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இது பட்ஜெட் சலுகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் டிசம்பர் 6 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomiயின் Redmi 13C 5G உடன் போட்டியாக இருக்கும். Realme C67 5G யின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், அதைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிவருகின்றன. இப்போது ஒரு சமீபத்திய லீக் வந்துள்ளது, இதில் Realme C67 யன் 4G வேரியண்டின் முக்கிய சிறப்பம்சங்கள் குறிப்பிட்டுள்ளன

ஃபேஸ்புக் பயனர் ராபி லீக் ப்ரோமொசனால் போட்டோ மற்றும் வதந்தியான Realme C67 4G வேரியண்டின் முக்கிய சிறப்பம்சங்களை ஷேர் செய்துள்ளார் 5G வேரியன்ட் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்ட அதே லைம் க்ரீன் நிற விருப்பத்தில் போன் காணப்படுகிறது, ஆனால் பின்புற கேமரா மாட்யுல் டிசைன் வேறுபட்டதாக தோன்றுகிறது. Realme C67 5G சற்று உயர்த்தப்பட்ட வட்ட கேமரா மாட்யுல் உடன் காணப்படும், Realme C67 4G ஆனது ஓவல் வடிவ மாட்யுல் வெர்டிக்கள் இரண்டு லென்ஸ் அலகுகள் பொருத்தப்பட்டிருக்கும்.

Realme C67 4G சிறப்பம்சம்

Realme C67 யின் 4G வேரியன்ட் ஒரு IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் மேல் ஒரு சென்டர் ஹோல்-பஞ்ச் கட்அவுட் உள்ளது. இது முழு-HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ரஸ் ரேட் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, ஃபோன் 6nm Qualcomm Snapdragon 685 சிப்செட்டில் வேலை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை eMMC அல்லது UFS இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.

லீக் போட்டோக்களின் படி Realme C67 4G இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை சுமார் IDR 2,000,000 (தோராயமாக ரூ. 10,700) மற்றும் இரண்டு வகைகளில் கிடைக்கும் – 8GB + 128GB மற்றும் 8GB + 256GB. போனில் 108 மெகாபிக்சல் Samsung ISOCELL HM6 ப்ரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க: Realme GT 5 Pro 1TB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம், இதன் சிறப்பு தகவலை பார்க்கலம்

Realme C67 4G ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யக்கூடும் என்று கசிவு தெரிவிக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI உடன் அனுப்பப்படலாம். இதில் மினி கேப்சூல் 2.0, டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் NFC கனெக்டிவிட்டி சப்போர்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்கை வரலாம். லீக்கின் படி, போனில் திக்னஸ் 7.9mm ஆக இருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :