digit zero1 awards

Realme C65 5G அறிமுகத்திற்க்கு அனைத்து தகவலையும் வெளியிட்டது

Realme C65 5G அறிமுகத்திற்க்கு அனைத்து தகவலையும் வெளியிட்டது
HIGHLIGHTS

Realme C65 இந்தியாவில் அறிமுகம் மிக அருகில் இருக்கிறது

இப்பொழுது அறிமுகத்திற்க்கு முன்பே சிறப்பம்சம் மற்றும் டிசைன் தகவல் வெளியாகியுள்ளது

Realme C65 5G அறிமுகம் தொடர்பான சிறப்பு விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

Realme C65 இந்தியாவில் அறிமுகம் மிக அருகில் இருக்கிறது, இந்த போனை பற்றி பல வாரமாக பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறது, இப்பொழுது அறிமுகத்திற்க்கு முன்பே சிறப்பம்சம் மற்றும் டிசைன் தகவல் வெளியாகியுள்ளது போனின் படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது இந்த போன் பட்ஜெட்டுக்கு ஏற்ற போனாக பேசப்பட்டுள்ளது இதில், இதன் டிஸ்ப்ளே, பேட்டரி, ஸ்டோரேஜ் போன்றவை முக்கிய ஈர்ப்புகள். Realme C65 5G அறிமுகம் தொடர்பான சிறப்பு விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

Realme C65 5G லீக் ஆன தகவல்

Realme C65 5G ஸ்மார்ட்போன் ஒரு குறைந்த விலை கொண்ட போனாக இருக்கும் மற்றும் இது இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் இந்த போனின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த புதுப்பிப்பை வழங்கியுள்ளார். இந்த போன் 6.67 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது. இது 120Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் டிஸ்ப்ளே டிசைன் பஞ்ச்ஹோல் கட்அவுட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் அதன் செல்ஃபி கேமரா உள்ளது. சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த ஃபோன் அதன் விலை வரம்பில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் முதலாவதாக இருக்கும். டிஸ்ப்ளே 625 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இரவில் கண் அழுத்தத்தைக் குறைக்க இதை 1 நைட்டாகவும் குறைக்கலாம்.

இந்த போனில் MediaTek Dimensity 6300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் தவிர, 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடும் இந்த போனில் இருக்கும். அதிக ரேமுக்கு, 6 ​​ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் என்ற விருப்பம் கொடுக்கப்படலாம். இதன் ஸ்டோரேஜ் விரிவாக்கத் திறனும் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக 2TB வரை சேமிப்பக ஆதரவுடன் ஃபோன் வரலாம். கேமராவைப் பற்றி பேசுகையில், போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா இருக்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவுடன் இந்த போன் வரவுள்ளது.

Realme C65 5G யின் பேட்டரி பவர் 5000mAh என கூறப்படுகிறது. இதனுடன், 15W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் இருக்கும். இது தவிர, இந்த போனின் டைமென்சன் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த போன் 7.89mm திக்னஸ் மற்றும் 190 கிராம் எடை கொண்டது. உருவாக்க வகை மிகவும் மெலிதானது. இது தவிர, செக்யுரிட்டிக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரும் உள்ளது என்று கூறப்படுகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டண்டிர்க்கான IP54 என மதிப்பிடப்பட்டுள்ளது. போனின் விலை ரூ.10,000க்கும் குறைவாக இருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க Jio யின் இந்த ஒரு ரீச்சர்ஜில் குடும்பமே நன்மை பெறலாம் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo